உள்ளடக்கத்துக்குச் செல்

முள்கம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்கம்பி
முள்கம்பி சுருள்

முள்கம்பி (barbed wire) என்பது ஒரு வகை எஃகு கம்பியாகும். இதனை பார்பு கம்பி (Barb wire), பாபு கம்பி ( Bab wire)[1][2], அமெரிக்காவின் தென் பகுதியில் இதனை பாபெட் கம்பி (Babbed wire)[3] என்றும் அழைத்தனர். இதில் கூர்மையான முனைகளையுடைய சிறு கம்பித்துண்டுகள் சீரான இடைவெளியில் பொருத்தப்பட்டிருக்கும். இக்கம்பி மலிவான வேலி அமைப்பதற்கும் சுவர்களின் மீது கூடுதல் பாதுகாப்பு கொடுப்பதற்கும் பயன்படுகிறது. போர்க்காலங்களில் தடைகள் ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. இவற்றை முள்கம்பி, தூண்கள், பிணிக்கை போன்ற பிணைக்கும் கருவிகளுடன் சுலபமாகப் பொருத்திவிடலாம். முதன் முதலாக கால்நடைகளைப் பட்டியில் அடைக்க இது பயன் படுத்தப்பட்டது அமெரிக்காவில் முதன் முதலாக 1867 ஆம் ஆண்டு இதற்கு காப்புரிமை பெற்றவர் ஒகையோ மாநிலத்தைச் சேர்ந்த லுசின் பி சுமித்து (Lucien B. Smith)ஆகும் [4][5] 1874 ஆம் ஆண்டு இன்றைய நடைமுறையில் உள்ள முள்கம்பிக்கு இல்லிநாசு மாநிலத்தைச் சேர்ந்த ஜோசப் எப் கிளிட்டன் ((Joseph F Glidden)) என்பவர் காப்புரிமை பெற்றுள்ளார்.

வரலாறு[தொகு]

ரிச்சர்டு நீயூட்டன் என்னும் ஆங்கிலேயர் 1845 ஆம் ஆண்டு அர்ஜன்டைன் பாமபாசு என்னும் இடத்திற்கு முதலில் முள்கம்பியை கொண்டு வந்தார்.[6]

பிரான்சு நாட்டில் சரித்திரத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் பலரால் இதுபோன்ற முள்கம்பி உருவாக்கப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. லியோன்சு யூஜின் கிராசின்-பால்டன்சு (Leonce Eugene Grassin-Baldans) என்னும் பிரஞ்சுக்காரர் 1860 ஆம் ஆண்டு, முதலில் உலோகத் தகட்டை புரிகோள் போன்று முறுக்கி முயற்சி செய்துள்ளார். லூயி ஜானின் (Louis Jannin) என்னும் மற்றொரு பிரஞ்சுக்காரர் 1865 ஆம் ஆண்டு முள்கம்பியை உருவாக்குவதில் முயற்சி செய்துள்ளார். 1867-ல் பல அமெரிக்கர்கள் முள்கம்பியை உருவாக்க முயன்றுள்ளனர்.[7] இது போன்று பல முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று ஜோசப் கிளிடன் (Joseph Glidden) (1813-1906) மலிவாக அதிகமான அளவில் முள்கம்பியை உற்பத்தி செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்குக் காப்புரிமையும் 1874 ஆம் ஆண்டு பெற்றார். இதனைத் தொடர்ந்து இதன் உற்பத்தி காட்டுத் தீ போல் பரவியது. முள்கம்பியைக் கண்டுபிடித்த முக்கியமான நால்வர் ஜோசப் கிளிடன், ஜேக்கப் கைசு (Jacob Haish ),சார்லசு பிரான்சிசு வாச்பர்ன், (Charles Francis Washburn ) மற்றும் ஐசாக் எல்வுட் ( Isac L Elwood ) ஆகும் [8] அமெரிக்கவில் 1862 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கோம்செட் (Homestead) என்னும் சட்டப்படி 13 மாநிலங்களைத் தவிர்த்து வேறு இடங்களில் எந்த ஒரு அமெரிக்கரும் 160 ஏக்கர் நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று அறிவிக்கப்பட்டது. ஆதலால் விலை மலிவான முள்கம்பி நிலத்திற்கு வேலி அமைப்பதற்கு மிகவும் ஏதுவாக இருந்ததால் இதற்கு பெரிய வரவேற்புக் கிடைத்தது.

தாக்கம்[தொகு]

உலகம் முழுவதும் முள்கம்பி மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலங்களுக்கு வேலி அமைப்பதன் மூலம் புதிய குடியிருப்புக்களை ஏற்படுத்துவதற்கும், ஆடு மாடுகளை அடைத்து வைப்பதற்கும் அமெரிக்கவில் முள்கம்பி பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. உலகில் பல இடங்களில் நடந்த போர்களிலும் முள்கம்பி பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக பூவர் போரிலும், முதலாம் உலகப் போரிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. சண்டை சச்சரவிற்கும் அடக்கு முறைக்கும் முள்கம்பி அடையாளமாகக் காணப்படுகிறது..

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fencing Frontiers: The Barbed Wire Story". Ellwood House Museum, DeKalb, IL. Archived from the original on 2006-07-12. பார்க்கப்பட்ட நாள் 2006-11-27. Glidden Steel called its product "Barb Wire".
  2. Timothy Foote (September 6, 1998). "The Rape of the West". The New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9806E1D8113CF935A3575AC0A96E958260&n=Top%2FFeatures%2FBooks%2FBook%20Reviews. பார்த்த நாள்: 2006-11-28. 
  3. "A Collection of Barbed Wire". Murray County Museum. Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2006-11-28.
  4. "The American Experience Technology Timeline: 1752 - 1990". The American Experience. Public Broadcasting Systems. 2000. Archived from the original on 7 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-28.
  5. "Lucien B. Smith". Ohio History Central. Ohio Historical Society. 31 July 2006. Archived from the original on 2007-10-03. பார்க்கப்பட்ட நாள் 2009-01-28.
  6. John Crow, "The Epic of Latin America, University of California Press; 4th edition (January 17, 1992) "
  7. Jack Challoner, 1001 Inventions that changed the World, Hachette India (2013) ISBN 978-93-5009-685-7
  8. Alan Krell, The Devil's Rope: A Cultural History of Barbed Wire (London: Reaktion Books Ltd, 2002), p.23.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
முட்கம்பி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்கம்பி&oldid=3587943" இலிருந்து மீள்விக்கப்பட்டது