உள்ளடக்கத்துக்குச் செல்

முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முருகன் கோயில் என்பது இந்துக் கோயிலின் கருவறையில் முருகன் அம்சமாக விளங்கும் மூலவர் தெய்வம் வீற்றிருக்கும் பட்சத்தில், அக்கோயில் முருகன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் சைவ வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பூசைகள் நடைபெறும் தலமாக விளங்குகிறது. முருகன் அம்சம் என்று குறிப்பிடப்படும் அர்த்தமானது, முருகன் மற்றும் அவரது வெவ்வேறு திருநாமங்களாக சுப்பிரமணியசுவாமி, பாலசுப்பிரமணியர், தண்டாயுதபாணி சுவாமி, பழனி ஆண்டவர், கார்த்திகேயர், குமாரசுவாமி, சரவணபவர், வேலவர், சண்முகர், கந்தசுவாமி மற்றும் ஆறுமுகர் என்று முக்கியமானவைகளாகக் கருதப்படுகிறது.

பழனியில், தண்டாயுதபாணி சுவாமி கோயில் கொண்டு, முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.[1] திருச்செந்தூரில், சுப்பிரமணியசுவாமி கோயில் கருவறையில், முருகன் காட்சியளிக்கிறார்.[2] சுவாமிமலையில், சுவாமிநாதசுவாமி கோயிலில் முருகன் தோற்றமளிக்கிறார்.[3] சென்னையின் வடபழனியில், பழனி ஆண்டவர் கோயிலில் முருகன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani - 624601, Dindigul District [TM032203].,Dhandayuthapani". palanimurugan.hrce.tn.gov.in. Retrieved 2023-01-09.
  2. "Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur - 628215, Thoothukudi District [TM038271].,Senthilambathy, Thirucheeralaivai,Senthilandavar, Kadarkarai aandi". tiruchendurmurugan.hrce.tn.gov.in. Retrieved 2023-01-09.
  3. "Swaminathaswami Temple : Swaminathaswami Swaminathaswami Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-01-09.
  4. "Vadapalani Andavar Temple : Vadapalani Andavar Vadapalani Andavar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகன்_கோயில்&oldid=3825218" இலிருந்து மீள்விக்கப்பட்டது