முரண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு ஆகும். முரண்பாட்டின் இறுக்கமானசிக்கலுற்ற நிலை பிணக்கு எனப்படும். சிலர் முரண்பாட்டையே பிணக்கு என விபரிக்கின்றனர். முரண்பாடு எங்கும் எப்போதும் காணப்படும் ஒரு வகைமாதிரியான தோற்றப்பாடாகும்.

வரைவிலக்கணம்[தொகு]

ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர் அல்லது குழுக்களுக்கிடையில் அல்லது அவற்றுக்குள்ளே அவை கொண்டுள்ள ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடற்ற இலக்கு, தேவை, விருப்பு, நம்பிக்கை, விழுமியம் நடத்தை அல்லது புரிந்து கொள்ளலின் அடிப்படையில் எழும் இறுக்கமான இணங்காத்தன்மை முரண்பாடு என வரையறுக்கப்படும்.

முரண்பாட்டின் வகைகள்[தொகு]

 • அகமுரண்பாடு – விரக்தி, பைத்தியம், தற்கொலை முயற்சி
 • தனிநபர் முரண்பாடு
 • குடும்ப முரண்பாடு – உள்ளேயும், இடையேயும்
 • சமூக முரண்பாடு
 • அரசியல் முரண்பாடு
 • சமய /இன / வர்க்க முரண்பாடு
 • மனித – விலங்கு முரண்பாடு
 • சித்தாந்த முரண்பாடு/ கொள்கை முரண்பாடு
 • நிறுவனம் முரண்பாடு

முரண்பாட்டுக்கான காரணங்கள்[தொகு]

 • அரிதான வளங்கள் : நிதி, தகவல், ஏனையவளங்கள் அரிதாகக் காணப்படுதல்.

இலக்கை அடைய அதிக வளங்களை பெற முயலுதல்.

 • தெளிவற்ற பொறுப்புகள் : சமூகவகிபாகத்தில்அல்லது தொழில் ரீதியாக வரம்புகள், எல்லைகள், பொறுப்புகள் என்பன துல்லியமாக வரையறுக்கப்டாதபோது.
 • தொடர்பாடல் சிக்கல்கள் : முறையற்ற தொடர்பாடல், தவறாகப்புரிதல், தவறானபுலணுணர்வு.
 • ஆளுமை மோதல்
 • பதவிநிலை வெறுபாடுகள் : வலு,செல்வாக்கினை எல்லைகடந்து அதிகரிக்க முயலுதல்.
 • குறிக்கோள் வேறுபாடு
 • அதிகப்படியான வேலைச்சுமை
 • வேறுபாடான எண்ணக்கருத்துகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்பாடு&oldid=3023458" இருந்து மீள்விக்கப்பட்டது