மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு
Skeletal formula of trimethyltin chloride
Ball-and-stick model of the trimethyltin chloride molecule
பெயர்கள்
வேறு பெயர்கள்
குளோரோமெத்தில்சிடானேன்; குளோரோமெத்தில்டின்; டிரைமெத்தில்குளோரோசிடானேன்; டிரைமெத்தில்குளோரோடின்; டிரைமெத்தில்சிடானைல் குளோரைடு; டிரைமெத்தில்டின் மோனோகுளோரைடு
இனங்காட்டிகள்
1066-45-1 Yes check.svgY
ChemSpider 13398 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14016
UNII 9E3BCA3684 N
பண்புகள்
C3H9SnCl
வாய்ப்பாட்டு எடை 199.27 கிராம்/மோல்
உருகுநிலை
கொதிநிலை 148 °C (298 °F; 421 K)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் 26/27/28-50/53
S-சொற்றொடர்கள் 26-27-28-45-60-61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு (Trimethyltin chloride) என்பது (CH3)3SnCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிரைமெத்தில்டின் குளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இக்கரிமவெள்ளீயச் சேர்மம் வெண்மை நிறத்தில் திண்மமாகவும் அதிக நச்சுத்தன்மையுடனும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. நீராற்பகுப்பால் இது எளிமையாகப் பாதிக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

டெட்ராமெத்தில்வெள்ளீயத்துடன் வெள்ளீய டெட்ராகுளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதால் மறுபங்கீட்டு வினை நிகழ்ந்து மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு உருவாகிறது [1]

SnCl4 + 3 SnMe4 → 4 Me3SnCl.

இவ்வினை கோச்செசுக்கோவ் மறுபகிர்வு வினை எனப்படுகிறது. ஆர்கான் வாயுவைப் போன்ற மந்தவாயுச் சூழலில் பொதுவாக கரைப்பான் இல்லாமல் இவ்வினை நிகழ்கிறது.

தொடர்புடைய ஐதராக்சைடு அல்லது ஆக்சைடுடன் ஐதரசன் குளோரைடு அல்லது தயோனைல் குளோரைடு (SOCl2) போன்ற ஓர் ஆலசனேற்ற முகவரைச் சேர்த்து சூடுபடுத்துவது மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு தயாரிப்பதற்கான இரண்டாவது வழிமுறையாகும்.

Me3SnOH + HCl → Me3SnCl + H2O

பயன்கள்[தொகு]

டிரைமெத்தில்சிடானைல் [2] தொகுதிச் சேர்மங்களுக்கு டிரைமெதில்டின் குளோரைடு ஆதார மூலமாகத் திகழ்கிறது. உதாரணமாக வினைல்டிரைமெத்தில்சிடானேன் மற்றும் இண்டேனைல்டிரைமெத்தில்சிடானேன் போன்ற சேர்மங்கள் தயாரிப்புக்கு இது முன்னோடிச் சேர்மமாக இருக்கிறது :[3]

CH2=CHMgBr + Me3SnCl → Me3SnCH=CH2 + MgBrCl
LiC9H7 + Me3SnCl → Me3SnC9H7 + LiCl.

வெள்ளீயம்கார்பன் பிணைப்பு உருவாவதற்கு மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடுடன் வினைபுரிவதற்குத் தேவையான கரிமலித்தியம் வினையாக்கிக்கு உதாரணம் :

LiCH(SiMe3)(GeMe3) + Me3SnCl → Me3SnCH(SiMe3)(GeMe3) + LiCl

மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடிலிருந்து வருவிக்கப்படும் கரிமவெள்ளீயச் சேர்மங்கள் கரிமத் தொகுப்பு வினைகளில், குறிப்பாக தனி உறுப்பு சங்கிலி வினைகளில் மிகுந்த பயனுள்ளவையாக உள்ளன. பாலி வினைல் குளோரைடு நிலைநிறுத்தும் வினைகளில் மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு ஒடுக்கப்படுவதால் வெள்ளீயம்-வெள்ளீயம் பிணைப்புகள் உருவாகின்றன.

Me3SnM + Me3SnCl → Sn2Me6 + MCl (M = உலோகம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Scott, W. J.; Crisp, G. T.; Stille, J. K. (1990), "Palladium-catalyzed Coupling of Vinyl Triflates with Organostannanes: 4-tert-Butylcyclohexen-1-yl)-2-propen-1-one", Org. Synth. 68: 116, http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv8p0097 ; Coll. Vol. 8: 97 
  2. Davies, A. G. (2008). "Tin Organometallics". Comprehensive Organometallic Chemistry. 3. Elsevier. பக். 809–883. doi:10.1016/B0-08-045047-4/00054-6. 
  3. Robert J. Morris, Scott L. Shaw, Jesse M. Jefferis, James J. Storhoff, Dean M. Goedde. "Monoindenyltrichloride Complexes of Titanium(IV), Zirconium(IV), and Hafnium(IV)". Inorg. Synth. 32: 215-221. doi:10.1002/9780470132630.ch36.