முப்புளோரோமீத்தேன்சல்போனைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புளோரோமீத்தேன்சல்போனைல் வேதி வினைக்குழு
முப்புளோரோமீத்தேன்சல்போனைல் வேதி வினைக்குழு

முப்புளோரோமீத்தேன்சல்போனைல் (Trifluoromethanesulfonyl) என்பது F3CSO2– என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழு தொகுதியாகும். டிரைபுளோரோமெத்தேன்சல்போனைல் குழு என்றும் திரிப்லைல் குழு என்றும் அழைத்து –Tf என்ற சுருக்கக் குறியீட்டால் அடையாளப்படுத்துவார்கள்.

இவ்வேதி வினைக்குழுவுடன் தொடர்புடைய முப்புளோரோமீத்தேன்சல்போனேட்டு என்பது F3CSO2O– என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. திரிப்லேட்டு என்றும் டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு என்றும் அழைக்கப்பட்டு –OTf. இதை என்ற சுருக்கக் குறியீட்டால் அடையாளப்படுத்துவார்கள்.

பிசு(முப்புளோரோமீத்தேன்சல்போனைல்)அனிலின், [1] திரிப்லிக் நீரிலி [2] போன்றவை இதனுடன் தொடர்புடைய பிற சேர்மங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zeller, Wayne E.; Schwörer, Ralf (2009). "N-Phenyltrifluoromethanesulfonimide". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rp142.pub2. 
  2. Baraznenok, Ivan L.; Nenajdenko, Valentine G.; Balenkova, Elizabeth S. (May 2000). "Chemical Transformations Induced by Triflic Anhydride". Tetrahedron 56 (20): 3077–3119. doi:10.1016/S0040-4020(00)00093-4.