முப்புளோரோசல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முப்புளோரோசல்பேட்டு (Triluorosulfate) என்பது SO2F3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு அயனியாகும். [1] முப்புளோரோசல்பேட்டு என்ற இச்சொல் தெளிவற்ற முறையில் மூன்று புளோரோசல்பேட்டு அயனிகளைக் குறிப்பதாகவும் உள்ளது. சிலர் முப்புளோரோமெத்தில் சல்பேட்டு அயனியையும் இச்சொல் குறிப்பதாக எடுத்துக் கொள்கின்றனர். [2]

பண்புகள்[தொகு]

முப்புளோரோசல்பேட்டு அயனி C2v சீரொழுங்குடன் கூடிய சிதைந்த முக்கோண இருபட்டைக்கூம்பு வடிவத்தைக் கொண்டுள்ளது. நடுக்கோட்டில் இரண்டு ஆக்சிசன் அணுக்கள் 143.2 பைக்கோ மீட்டர் நீளமுடைய கந்தகத்துடன் பிணைந்துள்ளன. நடுக்கோட்டின் மீதுள்ள புளோரின் அணு 157.9 பைக்கோ மீட்டர் நீளம் கொண்டுள்ளது. பட்டைக்கூம்பின் உச்சியிலுள்ள மற்ற இரண்டு புளோரின் அணுக்கள் 168.5 பைக்கோமீட்டர் நீளம் கொண்டு ∠FSF புள்ளிகளுக்கிடையே 165.2 பாகை கோணத்தை உண்டாக்குகின்றன. [1]

பட்டியல்[தொகு]

பெயர் வாய்ப்பாடு எடை திட்டம் இடக்குழு அலகு கூடு கன அளவு அடர்த்தி பண்புகள் ref
டெட்ராமெத்திலமோனியம் டிரைபுளோரோசல்பேட்டு [(CH3)4N][SO2F3] நிறமற்றது [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Hohenstein, Christian; Kadzimirsz, Daniel; Ludwig, Ralf; Kornath, Andreas (17 January 2011). "Synthesis and Characterization of Tetramethylammonium Trifluorosulfate". Chemistry - A European Journal 17 (3): 925–929. doi:10.1002/chem.201000102. பப்மெட்:21226109. 
  2. Serrano, Jose Luis (2008) (in en). Metallomesogens: Synthesis, Properties, and Applications. John Wiley & Sons. பக். 497. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-61508-7. https://books.google.com/books?id=wKXvr3aien0C&pg=PA497. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்புளோரோசல்பேட்டு&oldid=3077614" இலிருந்து மீள்விக்கப்பட்டது