முப்பரிமாண மாற்றிய வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வேறு வகையான மாற்றியங்கள் - முப்பரிமாண மாற்றியம்

மூலக்கூறுகளில் உள்ள அணுக்கள் புறவெளியில் அமைந்துள்ள விதம் மாறுபடுவதால் ஏற்படும்  மாற்றியங்களை விளக்கும் வேதியியலின் உட்பிரிவே முப்பரிமாண மாற்றிய வேதியியல் ஆகும்.[1] சீர்மையற்ற மூலக்கூறுகளில் முப்பரிமாண மாற்றியம் ஏற்படுகின்றது.

மாற்றியத்தின் வகைகள்[தொகு]

பின்வருமாறு இரு பெரும் பிரிவுகளாக மாற்றியங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

1.அமைப்பு மாற்றியம். 2.முப்பரிமாண மாற்றியம்.

ஓரு மூலக்கூறில் உள்ள அணுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் முறையில் (புறவெளியைக் குறித்துக் காட்டாமல்) மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் ”அமைப்பு மாற்றியம்' ஆகும். மூலக்கூறில் எத்தகைய அணுக்கள் நேரடியாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன, எத்தகைய பிணைப்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பொருத்து மாற்றியங்கள் ஏற்படுகின்றன.

புறவெளி மாற்றியம், ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்கள் புறவெளியில் அமைக்கப்பட்டிருப்பதில் வேறுபடுவதால் உண்டாகிறது. புறவெளி மாற்றியங்கள், ஒத்த அமைப்பைப் பெற்றிருந்தும், மூலக்கூறில் உள்ள அணுக்கள் புறவெளியில் எத்திசைகளை நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன என்பதில் வேறுபடுகின்றன. ஒத்த அமைப்பைப் பெற்றிருப்பதால் பண்புகளில் வெகுவாக மாறுபடுவதில்லை.

குறிப்புகள்[தொகு]