முனாஜாத்துத் திரட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனாஜாத்துத் திரட்டு என்பது 1872 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ஒரு இசுலாமியத் தமிழ் கவிதை நூல் ஆகும். இன்று கிடைக்கும் ஆகப் பழமையான சிங்கப்பூர் தமிழ் வெளியீடு இதுவாகும். இது கூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரால் எழுதப்பட்டது. இது சிங்கப்பூரிலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த இறைதூதர்களைப் பற்றிய கவிதைகளைக் கொண்ட தொகுப்பு நூல் ஆகும். சிங்கப்பூரில் ஜே. பேட்டன் அரசாங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் அரிய நூல்கள்-1 முதல் 5 வரை[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ஆகப்பழைய தமிழ் நூல் - முனாஜாத்துத் திரட்டு[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனாஜாத்துத்_திரட்டு&oldid=3225310" இலிருந்து மீள்விக்கப்பட்டது