முத்து வடுகநாத சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்து வடுகநாத சித்தர் என்பவர் சிங்கம்புணரியில் ஜீவ சமாதியடைந்த சித்தராவார். இவரைப் பட்டூர் வாத்தியார், வடுகநாத சித்தர் என்றும் அழைக்கின்றனர். இவருடைய ஜீவ சமாதியில் உள்ள சிலை, மனிதர்களுக்குப் போல வியர்க்கிறது என்ற நம்பிக்கை நிலவுகிறது.

பிறப்பு[தொகு]

முத்துவடுகநாதர் ராமநாதபுர சமஸ்தான மன்னர் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகளுக்குப் பிறந்த பூவலத் தேவன் - குமராயி தம்பதியினருக்கு மகனாக கிபி 1737 ஆம் ஆண்டு பிறந்தார். [1] பூவலத் தேவன் இறந்தபிறகு, கலகக்காரர்களால் முத்து வடுகநாதரின் உயிருக்கு ஆபத்து வந்தது. இதனைப் பணியாட்கள் மூலம் அறிந்த குமராயி அங்கிருந்து பாலமேட்டிற்குக் குடிபெயர்ந்தார்.

இளமையும் திறனும்[தொகு]

முத்து வடுகநாதர்இளவதிலேயே சித்து வேலைகளை செய்து மக்களிடம் வியப்பினை ஏற்படுத்தினார். பட்டூர் குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பட்டூர் அருகேயுள்ள சிங்கம்புணரியில் சூனியக்கார கூட்டமொன்று மற்ற பரிவாரத் தெய்வங்களையும், ஊர் தெய்வங்களையும் கட்டிப்போட்டு மக்களைத் துன்புறுத்தினர். அதனையறிந்த முத்து வடுகநாதர், மாந்திரீக சித்திகளில் வென்று மக்களைக் காத்தார்.

சமாதியடைதல்[தொகு]

முத்துவடுக நாதர் தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே அறிவித்தார். எங்கு சமாதி ஆக வேண்டும் என இடத்தைத் தேர்ந்தெடுத்து சமாதியை தயார் செய்துள்ளார். சமாதியில் வைக்க தன்னுடைய கற்சிலையை செய்து அதற்குப் பூசைகள் செய்துள்ளார்.

அவர் கூறியபடியே 1883-ம் ஆண்டு ஆடி மாதம் ரோஹினி நட்சத்திரத்தில், சமாதியடைந்தார். அவருடைய‌ சமாதியில் பீடம் அமைத்து அவரது சிலையை வைத்துள்ளனர். அவர் பூசித்த வராகி அம்மன் சிலையை இடதுபக்கம் வைத்துள்ளனர். [2]

கோயில்[தொகு]

சிங்கம்புணரி முத்து வடுகநாத சித்தர் கோயில், சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம் [3]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.hindutamil.in/amp/news/spirituals/39283-.html
  2. https://www.hindutamil.in/amp/news/spirituals/39283-.html
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=1507282
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_வடுகநாத_சித்தர்&oldid=3789506" இலிருந்து மீள்விக்கப்பட்டது