முத்தரசோழபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்தரசோழபுரம் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், திருக்குவளை வட்டம், கச்சனகரம் ஊராட்சியில் அமைந்த ஒரு சிற்றூர்

இவ்வூர் சோழர்களால் ஆட்சி செய்யப்பட்ட்தாலும், முத்தரசன் என்னும் அரசன் அக்காலத்தில் ஆட்சிபுரிந்த்தாலும் இவ்வூர் முத்தரசோழபுரம் எனும் பெயர் பெற்றது.

இக்கிராமத்தில் சுமார் 600 பேர் மக்கள் வசிக்கிறார்கள். முதன்மையான தொழிலாக விவசாயத் தொழில் விளங்குகிறது.

இவ்வூரில் ஒரே ஒரு ஆரம்மப்பள்ளி மட்டுமே உள்ளது.

இவ்வூரில் குடிநீர்வசதி, போக்குவரத்து வசதி, கல்வி வசதி மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினாலும், இக்கிராமத்தில் உள்ள பலர் தங்கள் சொந்த ஊரை விட்டு நகரத்தை நோக்கி இடம்பெயர ஆரம்பிக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தரசோழபுரம்&oldid=1943100" இலிருந்து மீள்விக்கப்பட்டது