முதலாம் மாக்சிமிலியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்சிக்கோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன்

முதலாம் மாக்சிமிலியன் (Maximilian I), (ஜூலை 6, 1832ஜூன் 19, 1867) ஏப்ரல் 10 1864 இல் இருந்து மெக்சிக்கோவின் மன்னராக இருந்தவர். இவரது இயற்பெயர் ஃபேர்டினண்ட் மாக்சிமிலியன் ஜோசப் என்பதாகும். ஆஸ்திரியாவின் ஹாப்ஸ்பேர்க்-லொறையின் (Habsburg-Lorraine) என்ற அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரெஞ்சு மன்னன் நெப்போலியனின் உதவியுடன் மெக்சிகோவின் மன்னரானார். ஐக்கிய அமெரிக்கா உட்பட பல அரசாங்கங்கள் இவரது ஆட்சியை அங்கீகரிக்க மறுத்தன. இதனால் பெனிட்டோ ஜுவாரெஸ் (Benito Juárez) தலைமையிலான குடியரசுப் படைகள் மாக்சிமிலியனின் ஆட்சியை இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது. இறுதியில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு 1867-இல் Querétaro என்ற இடத்தில் குடியரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_மாக்சிமிலியன்&oldid=2971305" இலிருந்து மீள்விக்கப்பட்டது