முடச்சிக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முடச்சிக்காடு தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

முடச்சிக்காடு
முடச்சிக்காடு

முடச்சிக்காடு காவிரி ஆற்றின் கடைமடைப்பகுதியில் அமைந்துள்ளது. முடச்சிக்காடு முழுக்க விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமம் முடச்சிக்காடு. முடச்சிக்காடு கிராமத்தின் மூன்று எல்லைகளிலும் முடச்சிக்காட்டை காக்கும் காவல் தெய்வங்கள் உள்ளன. பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் முடச்சிக்காடு அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், ஓர் அரசு கலைக்கல்லூரியும் அமைந்துள்ளது. முடச்சிக்காட்டில் வடக்கு எல்லையில் அருள்மிகு முத்துப்பிடாரி அம்மனும், கிழக்கு எல்லையில் அருள்மிகு அம்மையப்ப அய்யனார் ஆலயமும் தெற்கு எல்லையில் சிவலிங்க்க சித்தி விநாயகரும் அமைந்துள்ளது சிறப்பு.

முடச்சிக்காட்டில் வடக்கு காவிரி ஆற்றின் கிளை ஆறும் மேற்கு எல்லையில் பூனைக்குத்தி ஆறும், தெற்கு எல்லையில் ஊமத்தாநாடு ஏரியும் உடைய நீர் நிலைகள் அமைந்துள்ளது முடச்சிக்காட்டின் நீர் நிலை ஆதாரமாக திகழ்கிறது.

mudachikkadu
முடச்சிக்காடு சிவலிங்க சித்தி விநாயகர் ஆலயம்
முடச்சிக்காடு அம்மையப்ப அய்யனார் கோவில் திருவிழா
mudachikkadu
முடச்சிக்காடு இளைஞர் மன்றம்
mudachikkadu
முடச்சிக்காடு
mudachikkadu
முடச்சிக்காடு வேளாண்மைப்பணி
mudachikkadu
முடச்சிக்காடு அம்மையப்ப அய்யனார் கோவில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடச்சிக்காடு&oldid=3705283" இலிருந்து மீள்விக்கப்பட்டது