முகப்புப் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்தரும் மாரியம்மன் திருக்கோயில்,இருக்கக்கூடிய

   புண்ணிய நதிகளின் அர்ச்சனா நதி,வைப்பாறு இரண்டும் ஒன்றாக கூடும் ஆலயம் தான் இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் ஆலயம். இத்திருபீடத்தில் ஐக்கியமாகியுள்ள சிவயோக ஞானசித்தர் அருவுருவாய் அன்னையை அனுதினமும் வழிபடுவதாக ஐதீகம். இரு கங்கைகள் கூடுவதால் 'இருக்கண்குடி' என்று புகழ் பெற்ற இவ்வாலயம், மதுரை -திருநெல்வேல்

நெடுஞ்சாலையில் சாத்தூருக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நித்தம் நித்தம் தன்னைத் தேடி வரும் பக்தர்களைத் தான் நாடிச்சென்று தரிசனம் தருவதற்கு "திரு" உலா வரும் காட்சிதான் திருவிழா. இத்தன்மை மிக்க இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவைக் காண வரும் பக்தகோடிகள் அனைவரின் உள்ளங்களிலும்,இல்லங்களிலும் அமைதியும், ஆனந்தமும் பெருகி,வளமும், நலமும் பெற்று வாழவேண்டும் என்று அன்னையைப் பிரார்த்திக்க அன்புடன் அழைக்கின்றோம்.


        திருக்கோயில் வரலாறு
  
  சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பாக தென்

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாகிய சதுரகிரி மகாலிங்கம் மலையில்,சிவயோக ஞானசித்தர் என்ற தவயோகி கடும் தவம் மேற்கொண்டு,அன்னை பராசக்தி இடம்,"நான் யோக நிஷ்டை ஆகும் (ஐக்கியம்) இடத்தில் என் அன்னை பராசக்தி சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும்", என்ற அரிய வரம்.

  ஐந்து நதிகள் சங்கமிக்கும் புண்ணிய

பூமியில் ஐக்கியமாக வேண்டும் என்ற அன்னை பராசக்தியின் வார்த்தைகளை ஏற்று அங்கிருந்து நதிகள் சங்கமம் ஆகின்ற இத்திருத்தலத்தில் தேர்வு செய்து அந்த இடத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

  இந்நிலையில் நாடெங்கும் ஊழிப்பிரளயம் ஏற்பட்டு,காட்டாற்று வெள்ளத்தால் நாட்டின் பல கிராமங்கள் அழிந்தன. அந்தப் பெரு வெள்ளத்தால் இழுத்துவரப்பட்ட அன்னை பராசக்தியின்

திருஉருவச்சிலை,சித்தர் ஐக்கியமாகிய இடத்தை அடைந்தும், வெள்ளத்திலிருந்து விடுபட்டுச் சுழலெடுத்து கொண்டது.

  அர்ச்சுனா நதியின் கரையிலிருக்கும்

இருக்கண்குடி கிராமப் பெண்கள் சேகரித்து விட்டு,சாணக்கூடையை தலைக்குத் தூக்க முயற்சிக்கும் போது, திருக்கோயிலின் தற்போதைய பரம்பரை அறங்காவலர் / பூசாரிகளின் குடும்பத்தைச் சார்ந்த மூதாதையராண இராமசாமி பிள்ளை அவர்களின் பரிபூரணத்தம்மாள் என்ற பெண்ணின் சாணக்கூடையை மட்டும் தரையிலிருந்து எடுக்க முடியவில்லை. சாணத்தையெல்லாம் பரிபூரணத்தம்மாள் அகற்றிய பிறகும் எடுக்க முடியவில்லை. அனைவரும் அதிர்ச்சியோடு நிற்க,அந்தப் பெண்ணுக்கு அருள்வந்து தான் பூமிக்குள் புதைந்திருக்கும் சம்பவத்தைச் சொல்லி,"நான் மாரியம்மா, என்னைத் தோண்டியெடுத்து வழிபட்டு வந்தால் கைவிடாமல் காப்பாற்றுவேன் " என்று கூறி வலக்கை கொடுத்ததும் புதையுண்டிருந்த அம்மனைத் தோண்டி எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

  எங்கும் நிறைந்த பரம்பொருளாய், பெருஞ்சுடராய், தம்மை வழிபடும் பக்தர்கட்கு

தக்கவரம் தந்து தன் நிலையில் வைத்துப் பாதுகாக்கும் தன்னிகரில்லாத தாய் இவ்வாலயத்தில் அருள்பலிக்கும் இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மா.

  அன்னை பராசக்தியின் அருள்வாக்கு பலித்தாலும்,மகிமையாலும் நாடி வந்தவர்களுக்கெல்லாம் நல்ல பலன்

கிடைத்தாலும்,வரம் வேண்டியும்,வருகின்ற மக்களுக்கெல்லாம் பரிபூரண நிம்மதியும், நிறைவும் கிடைப்பத்தாலும், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மனுக்கு பெரும் கோயில் எழுப்பிகுடமுழுக்குவிழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஆடி,தை, பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகப்புப்_பக்கம்&oldid=3667014" இருந்து மீள்விக்கப்பட்டது