உள்ளடக்கத்துக்குச் செல்

மீள் காடு வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
15 வருடங்கள் நிரம்பிய மீள் காடாக்கப்பட்ட நிலம்

காடழிப்பால் அல்லது வேறு காரணங்களால் அழிக்கப்பட்ட ஒரு காட்டை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ மீண்டும் உருவாக்கலே மீள்காடு வளர்ப்பு எனப்படும். இச்செயற்பாடு மக்களின் வாழ்க்கையை பல வகையில் மேம்படுத்தக் கூடியது. மீள் காடு வளர்ப்பும் காடு வளர்ப்பும் ஒரே பதம் போலக் காண்ப்பட்டாலும் அவற்றிற்கிடையில் பல வித்தியாசங்கள் உண்டு. ஏற்கனவே காடாக இருந்து பின்னர் அழிக்கப்பட்ட ஒரு இடத்தை காடாக்கலே மீள் காடு வளர்ப்பு எனப்படும். ஒருபோதும் காடாக இருந்திராத ஒரு நிலத்தைக் காடாக்கலே காடு வளர்ப்பு எனப்படும்.

மீள் காடு வளர்ப்பின் பயன்கள்

[தொகு]
  • சூழல் மாசடைதலைத் தடுக்கும் அல்லது குறைக்கும்.
  • கார்பனீர் ஒட்சைட்டை ஒளித்தொகுப்புக்கு பயன்படுத்துவதால் பச்சை வீட்டு விளைவை குறைத்து, புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தும்.
  • உயிர்ப் பல்வகைமை காக்கப்படும்.
  • மரத் தளபாட உற்பத்திக்கு பங்களிப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீள்_காடு_வளர்ப்பு&oldid=2745532" இலிருந்து மீள்விக்கப்பட்டது