மீனாக்‌ஷி சேஷாத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீனாக்‌ஷி சேஷாத்ரி
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புசசிகலா சேஷாத்ரி
1963 (அகவை 57–58)
சிந்திரி, பீகார், இந்தியா
(தற்போது சார்க்கண்ட், இந்தியா)
தொழில்திரைப்பட நடிகை, நடனக் கலைஞர்
செயல் ஆண்டுகள்1982–1996
Spouseஹரிஷ் மைசூர்
(m.1995-present)
Children2

மீனாக்‌ஷி சேஷாத்ரி (Meenakshi Seshadri) (பிறப்பு 1963) இந்திய நடிகை, விளம்பர மாதிரி மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது காலத்தில் அதிக வருவாயை பெற்ற நடிகை எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் அதிகமாக நகைச்சுவை, நாடகம், அதிரடி மற்றும் காதல் வகைப் படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 17வது வயதில், 1981ம் வருடம் "ஈவ்ஸ் வீக்லி மிஸ் இந்தியா" போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றார்.[1][1][2]

மீனாக்‌ஷி சேஷாத்ரி முதன் முறையாக "பெயிண்டர் பாபு" (1983) திரைப்படத்தில் அறிமுகமானார். இதை அடுத்து நடித்த "ஹீரோ" (1983) திரைப்படம், மக்களிடையே அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. குறிப்பாக, 'ஹோசியர்' (1985), 'பேவாஃபை' (1985), 'மேரி ஜங்' (1985), 'சுவாதி' (1986), 'டாகேட்' (1987), 'இனாம் தஸ் ஹசார்' (1987), ஷாகென்ஷா' (1988), 'மஹாதேவ்' (1989), 'ஜர்ம்' (1990), 'காயல்', 'கர் ஹொ டு ஆசியா' 'டாமினி' (1993) போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.[3] இவர் நடித்துள்ள 'சுவாதி' (1986), 'டாஹ்லீஸ்' (1986), 'சத்யமேவ ஜயதே' (1987), 'அவார்கி' (1990) மற்றும் 'டாமினி' (1993) படங்களுக்கு மகத்தான விமர்சன பாராட்டுக்களைப் பெற்றார்.[4] இவர் 1980 மற்றும் 90களில் இந்திப் படவுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவரது நடிப்புத்திறன், அழகு மற்றும் இவரது நடனம் அனைவராலும் பேசப்பட்டது.[3] இவர் 90களில் நடந்த "கஜீராஹோ" நாட்டிய விழாவில் நடனம் ஆடியுள்ளார்.

இவரது சொந்தப் படமான "கதக்" திரைப்படத்தை வெளியிட்ட பிறகு படவுலகை விட்டு வெளியேறினார். தன் குழந்தைகளை வளர்ப்பதற்காக அமெரிக்காவில் தன் கணவருடன் வசிக்கிறார். அமெரிக்காவில், "செரிஷ் டான்ஸ் ஸ்கூல்" என்னும் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். இவரது வாழ்க்கை குற்த்து "மீனாக்‌ஷி அக்சப்ட் ஹர் விங்ஸ்" என்கிற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டது.[5][6]

இளமைப் பருவம்[தொகு]

மீனாக்‌ஷி சேஷாத்ரி, சார்க்கண்டிலுள்ள சிந்திரியில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார்.[7][8][9][10][11] இவர் இந்திய பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் மற்றும் ஒடிசி வகை நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். இவர் வேம்படி சின்ன சத்யம் மற்றும் ஜெய ராமா ராவ் போன்றோரிடம் நடனம் பயின்றார்; தனது 17வது வயதில், 1981ம் வருடம் "ஈவ்ஸ் வீக்லி மிஸ் இந்தியா" போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றார். மேலும் இவர், 1981ம் வருடம், தோக்கியோ, ஜப்பானில் நடந்த சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கு பெற்றார்.[12][13]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

 • 1991 – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். (ஜர்ம் திரைப்படம்-1990)
 • 1994 – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். ( டாமினி திரைப்படம்) [14]
 • 1993 – சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது [15]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "Actress missing from Action – Meenakshi Seshadri". Zee News. பார்த்த நாள் 29 January 2012.
 2. "Miss India and their Bollywood breaks". பார்த்த நாள் 25 June 2014.
 3. 3.0 3.1 Boxofficeindia.com. "Top Actress". மூல முகவரியிலிருந்து 17 October 2013 அன்று பரணிடப்பட்டது.
 4. "BoxOffice India.com". BoxOffice India.com. மூல முகவரியிலிருந்து 18 September 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 August 2010.
 5. "Box Office 1996". பார்த்த நாள் 5 June 2012.
 6. "The Miraculous Meenakshi | Lights Camera Action | Houston fSouth Asian Lifestyle Society News". lcahouston.com. பார்த்த நாள் 7 August 2012.
 7. [1]
 8. [2]
 9. "Daily Bhaskar: Bollywood's 'Damini' Meenakshi Seshadri turns 51". Daily Bhaskar. பார்த்த நாள் 22 December 2013.
 10. "Bollywood actress Meenakshi turns 48". Awaztoday.com (16 November 1959). மூல முகவரியிலிருந்து 7 December 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 March 2014.
 11. "Meenakshi Seshadri | Meenakshi Seshadri news | Meenakshi Seshadri movies | Meenakshi Seshadri pics | photos | images | Meenakshi Seshadri hits | Full movies | Meenakshi Seshadri hot pics". TollywoodTimes (16 November 1959). பார்த்த நாள் 11 March 2014.
 12. Kothari, Sunil; Avinash Pasricha (2001). Kuchipudi. Abhinav Publications. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170173590. 
 13. Mandhir Saikia and Avani Saxena (22 September 1999). "Meenakshi magic". Express. http://www.expressindia.com/ie/daily/19990922/ile22130.html. பார்த்த நாள்: 15 May 2012. 
 14. "Download Attachment". Deep750.googlepages.com. பார்த்த நாள் 11 March 2014.
 15. "Photo Gallery". Priyadarshniacademy.com. மூல முகவரியிலிருந்து 29 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 October 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாக்‌ஷி_சேஷாத்ரி&oldid=2975517" இருந்து மீள்விக்கப்பட்டது