மிர் யூசுப் அலி கான், மூன்றாம் சலார் ஜங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிர் யூசுப் அலி கான், மூன்றாம் சலார் ஜங்
பிறப்பு(1889-06-04)4 சூன் 1889
கிளாதுருஷ்ட் அரண்மனை, புனே, பிரித்தானிய இந்தியா
இறப்பு2 மார்ச்சு 1949(1949-03-02) (அகவை 59)
திவான் தேவ்டி, ஐதராபாத் இராச்சியம், இந்திய மேலாட்சி அரசு
ஐதராபாத்தின் பிரதம அமைச்சர்
பதவியில்
1912–1914
ஆட்சியாளர்ஓசுமான் அலி கான்
முன்னையவர்கிஷான் பிரசாத்

நவாப் மிர் யூசுப் அலி கான், மூன்றாம் சலார் ஜங் (Mir Yousuf Ali Khan, Salar Jung III) (1889-1949), பொதுவாக மூன்றாம் சலார் ஜங் என்று அழைக்கப்படும் இவர், ஐதராபாத் மாநிலத்தின் ஓர் பிரபுவும் கலைப் பொருட்கள் சேகரிப்பாளரும் ஆவார். ஏழாவது நிசாம் மிர் ஓசுமான் அலி கான் ஆட்சியின் போது இவர் ஐதராபாத்தின் பிரதமராக பணியாற்றினார். 1912 ஆம் ஆண்டில், தனது இருபத்தி மூன்று வயதில், மகாராஜா சர் கிஷான் பிரசாத்திற்குப் பிறகு பிரதமராகி இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார். பைகா குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களுக்குக் கீழே, ஐதராபாத்து தக்காணப் பிரபுக்களில் நான்காவது மிக உயர்ந்த பதவியை வகித்தார்.

கலைச் சேகரிப்புகள்[தொகு]

இவரது விரிவான கலைச் சேகரிப்புகள் இப்போது ஐதராபாத்தில் உள்ள சலார் ஜங் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[1]

சலார் ஜங் அரிய நினைவுச்சின்னங்கள், கலைப்பொருட்கள், பழங்காலப் பொருட்கள் மற்றும் குரான்கள் உட்பட பல நூல்களின் கையெழுத்துப் பிரதிகளை சேகரிப்பதில் ஆர்வமாக இருந்தார். 35 வருட காலப்பகுதியில் இவர் தனது சொந்த சேமிப்பை இவ்வாறானக் கலைச் சேகரிப்புக்காக செலவிட்டதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் மூன்று தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றான சலார் ஜங் அருங்காட்சியகத்திற்கு 1968 ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்படும் வரை இந்தத் தொகுப்பு இவரது குடும்ப இல்லமான திவான் தேவ்டியில் தனிப்பட்ட முறையில் காட்சிப்படுத்தப்பட்டு வந்தது.

புகைப்படங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அரசு பதவிகள்
முன்னர் ஐதராபாத்தின் பிரதம அமைச்சர்
1912–1914
பின்னர்