மின் தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் ஃஈலியம் (helium) அணுவின் உள்ளே இருவேறு மின்தன்மை பெற்ற துகள்கள்

மின் தன்மை என்பது மின் இயல்பு கொண்ட தன்மை. மின்னூட்டம் அல்லது மின் ஏற்பு பெற்ற பொருளின் இயல்பு. மின் தன்மையில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை நேர்மின்னூட்டம் அல்லது நேர்மின்னேற்பு என்றும் மற்றையது எதிர்மின்னூட்டம் அல்லது எதிர்மின்னேற்பு என்றும் அழைக்கப்படுகின்றது.

ஓரணுவி்ன் உள்ளே கருவில் உள்ள துகள்களில் சில நேர்மின்னூட்டம் உடையவை, இவைகளை நேர்மின்னிகள் என்றும் புரோத்தன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால் அணுவின் கருவைச் சுற்றி அலைந்து வரும் மிக நுண்ணிய துகள்கள் எதிர்மின்னூட்டம் உடையவை. இவை எதிர்மின்னிகள் அல்லது இலத்திரன்கள் என அழைக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_தன்மை&oldid=2740445" இருந்து மீள்விக்கப்பட்டது