மின்பணியாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்பணியாளர்
தொழில்
வகை தொழிற்கல்வி
செயற்பாட்டுத் துறை பராமரிப்பு, மின் கட்டம்
விவரம்
தேவையான கல்வித்தகைமை தொழிற்பயிற்சி

மின்வினைஞர் அல்லது மின்பணியாளர் (Electrician) என்பவர் மின் கம்பிகளை இடுதல், மின் கருவிகளை நிறுவுதல், பராமரித்தல் போன்ற மின்சாரம் தொடர்பான பணிகளைச் செய்ய தேர்ச்சி பெற்ற தொழிற்கலைஞர் ஆவார்.

பெரும்பாலான நாடுகளில் மின்வினைஞராகப் பணியாற்றுவதற்கு சான்றுடையராக இருக்க வேண்டும். கல்வியுடன், அனுபவம் மிக்க மூத்த மின்வினைஞரோடு வேலைப் பயற்சியும் பெற்று இருக்க வேண்டும்.

இந்தியா[தொகு]

இந்தியாவில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த சான்றிதழ் படிப்பில் சேரலாம். இது இரண்டு ஆண்டுகள் படிப்பாகும். இதில் படிப்பவர்களுக்கு கோட்பாடுகளில் குறைந்த நேரமும், நடைமுறைகளில் அதிக நேரமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து கொண்டு, தொழிற்சாலைகளில் மின்பணியாளராக பணிக்குச் சேரலாம். மின்பணியாளர் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியத்தில் விண்ணப்பித்து பி மின் உரிமம் பெற்று, கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மின் அமைப்புப் பணிகளில் ஈடுபடலாம். ஆனாலும் இவர்கள் 63கேவிஏ அளவுள்ள மன்அழுத்தப் பணிகளில் தான் ஈடுபட முடியும்.

மின்பணியாளர் சான்றிதழ் பயிற்சி வழங்கும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பெரும்பாலும், இந்தியாவின் அனைத்து ஊர்களிலும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்பணியாளர்&oldid=3525427" இலிருந்து மீள்விக்கப்பட்டது