மின்னலடித் தாக்குதல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மின்னலடித் தாக்குதல் என்பது கனரக அல்லது சிறப்பு படையணிகள் எதிரியின் களமுனை முக்கிய சிறிய பிரிவொன்றின் மீது அதிவேகமான குவியப்படுத்தப்பட்ட தொடர் தாக்குதலை நடத்தி, ஊடறுத்து ஒரு அனுகூல நிலையைப் பெறுவதைக் குறிக்கும். பீரங்கி நிலைகள், கட்டுப்பாட்டு தளங்கள், வானூர்தி தரிப்பிடங்கள் போன்றவை மின்னலடித் தாக்குதல் இலக்குகள் ஆகும். இவ்வகைத் தாக்குதல்களை நாசி ஜேர்மனி இரண்டாம் உலகப் போரின் போது முதலில் பரவலாக பயன்படுத்தியது. ஜேர்மன் மொழியில் இத்தாக்குதலை பிளிட்ஸ்கிரைக் (Blitzkrieg) என்பர்.
இவ்வணிகளை உள்ளே வரவிட்டு அடிப்பது இதற்கு ஓர் எதிர் தாக்குதல் முறையாகும்.