மிதிவண்டி பகிர்வுத் திட்டம்
Jump to navigation
Jump to search
மிதிவண்டி பகிர்வுத் திட்டம் (bicycle-sharing system) என்பது பல பெரும் நகரங்களில் மிதிவண்டிகளை ஒரு குறுகிய காலத்துக்குப் பயன்படுத்தக் கூடியதற்கான ஒர் ஏற்பாடு ஆகும். மிதி வண்டிகள் பயனர்கள் பெரிதும் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும். ஒருவர் ஒரு தரிப்பிடத்தில் இருந்து எடுத்துச் சென்று பிறதொரு இடத்தில் தரிப்பிட வேண்டும். பெரும்பாலும் உறுப்பினர் கட்டணம் செலுத்தி அல்லது ஒரு சிறு கட்டணத்துக்கு இவ்வாறு மிதிவண்டிகளைப் பயன்படுத்த முடியும். பல நகரங்களில் இலாபகரமாக இத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.