மிண்டி காலிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிண்டி காலிங்
2008 இல் மிண்டி காலிங்
பிறப்புவேரா மிண்டி சொக்கலிங்கம்
சூன் 24, 1979 (1979-06-24) (அகவை 44)
கேம்பிரிட்சு, மசாச்சுசேட்சு, அமெரிக்கா
பணிநடிகை, நகைச்சுவையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004–நடப்பு

வேரா சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட மிண்டி காலிங் (Mindy Kaling) இந்தியத் தமிழ் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நாடக நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். என்.பி.சி நிறுவனத்தின் "தி ஆபீசு" நாடகத்தில் கெல்லி கபூர் எனும் பாத்திரம் மூலம் பரவலாக அறியப்படுபவர். இவரது தந்தை கட்டுமான பொறியாளர், தாய் மகப்பேறு மருத்துவர். இவரது பெற்றோர்கள் நைசீரியாவுக்கு வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்து சென்றவர்கள். பின்னாளில், அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு 1979 ஆம் ஆண்டு குடி பெயர்ந்தது. இவருக்கு விசய் என்கிற மூத்த சகோதரர் உள்ளார்.

கல்லூரி படிப்பு முடித்தபின், காலிங் நியூ யார்க் மாகாணத்தில் உள்ள ப்ரூக்ளின் நகரத்தில் குழந்தைகள் காப்பாளராகவும், உதவி தயாரிப்பளாரகவும் வேலை செய்தார். தனது கடைசி பெயரான சொக்கலிங்கம் என்பதை காலிங் என மாற்றிக்கொண்டார். அவரது கல்லூரித் தோழி பிரெண்டா விதர்சு (Brenda Withers) உடன் இணைந்து எழுதிய "Matt&Ben" நாடகத்தின் மூலம் "தி ஆபீசு" நாடகத்தில் நடிக்க மற்றும் எழுதும் வாய்ப்பை பெற்றார். அன்றைய வருடத்தில் சிறந்த பத்து திரையரங்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக "டைம்" பத்திரிக்கை இந்த நாடகத்தை தேர்ந்தெடுத்தது. அவரது நகைச்சுவை உணர்வு அவரின் தாயிடம் இருந்து வந்தாக நினைக்கிறார்.

இவரது வாழ்க்கை வரலாற்றை "இசு எவரிவன் ஏங்கிங் வித்தவுட் மி? (அண்ட் அதர் கன்சென்சு)" எனும் நூலாக எழுதி வெளியுட்டுள்ளார்.

எழுதிய உட்கதைகள்[தொகு]

தலைப்பு தேதி பருவம்
ஆட் கேள் ஏப்ரல் 26, 2005 1
தி டுண்டீசு செப்டம்பர் 20, 2005 2
தி இஞ்சுரி சனவரி 12, 2006 2
டேக் யுவர் டாட்டர் டு வொர்க் டே மார்ச்சு 16, 2006 2
தீவாளி நவம்பர் 2, 2006 3
பென் பிராங்க்ளின் பெப்ரவரி 1, 1, 2007 3
பிரான்சு வார்சு நவம்பர் 1, 2007 4
நைட் அவுட் ஏப்ரல் 24, 2008 4
பிரேம் டோபி நவம்பர் 20, 2008 5
லெக்சர் சர்க்யுட்: பகுதி 1 பெப்ரவரி 5, 2009 2
லெக்சர் சர்க்யுட்: பகுதி 2 பெப்ரவரி 12, 2009 5
கோல்டன் டிக்கெட் மார்ச்சு 12, 2009 5
நயாகரா-கிரேக் டேனியல்சு உடன் சேர்ந்து எழுதியது அக்டோபர் 8, 2009 6
சீக்ரெட் சென்டா திசம்பர் 10, 2009 6
தி மேனேச்சர் அண்ட் தி சேல்சுமேன் பெப்ரவரி 11, 2010 6
செக்ரெடரியின் டே ஏப்ரல் 22, 2010 6
தி சிடிங் அக்டோபர் 21, 2010 7
கிளாசி கிறித்துமசு திசம்பர் 9, 2010 7
மைக்கேலின் லாசுட் டுண்டீசு ஏப்ரல் 21, 2011 7
கிறித்துமசு விசசு ஏப்ரல் 21, 2011 8

இயக்கிய உட்கதைகள்[தொகு]

தலைப்பு தேதி பருவம்
பாடி லாங்குவேச்சு ஏப்ரல் 29, 2010 6
மைக்கேலின் லாசுட் டுண்டீசு ஏப்ரல் l 21, 2011 7

இவை தவிர சில ஆலிவுட்டு திரைபடங்களில் குறும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவற்றில் குறிப்பிட தக்கவை "தி 40 இயர் ஓல்ட் விர்ச்சின்", "அன்அக்கம்பநிடு மைனர்", "நைட் அட் தி மிசியாம் : பெட்டல் அப் தி சிமித்துசோனியன்".

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிண்டி_காலிங்&oldid=3573966" இலிருந்து மீள்விக்கப்பட்டது