உள்ளடக்கத்துக்குச் செல்

மிகுவல் பெர்னார்டியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகுவல் பெர்னார்டியோ
பிறப்புமிகுவல் ஏஞ்சல் பெர்னார்டியோ டுவாடோ
12 திசம்பர் 1996 (1996-12-12) (அகவை 27)
வாலேன்சியா, எசுப்பானியா
தேசியம்எசுப்பானியர்
கல்விஅமெரிக்க அகாடமி நாடகக் கலை
படித்த கல்வி நிறுவனங்கள்சாண்டா மோனிகா கல்லூரி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2016–இன்று வரை
உயரம்1.77 m (5 அடி 9+12 அங்)
துணைவர்ஐதானா (2018–இன்று வரை)

மிகுவல் ஏஞ்சல் பெர்னார்டியோ டுவாடோ (ஆங்கில மொழி: Miguel Ángel Bernardeau Duato) (பிறப்பு: 12 திசம்பர் 1996) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகர் ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு தொடரான எலைட் என்ற தொடரில் 'குஸ்மான் நுனியர் ஒசுனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார்.

வாழ்க்கை[தொகு]

மிகுவல் பெர்னார்டியோ 12 திசம்பர் 1996 ஆம் ஆண்டு வாலேன்சியாவில் தொலைக்காட்சி தயாரிப்பாளர் மிகுவல் ஏங்கல் பெர்னார்டியோ மேஸ்ட்ரோவுக்கும் மற்றும் நடிகை அனா டுவடோவிற்கும் மகனாக பிறந்தார். இவருக்கு மரியா என்ற ஒரு இளைய சகோதரி உண்டு. இவர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சாண்டா மோனிகா கல்லூரியில் நாடகக் கலையில் கல்வி பயின்றார் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அமெரிக்க நாடகக் கலைக்கழகத்தில் நடிப்பு பயிற்றார்.[1] இவரும் எசுப்பானியா பாடகி ஐதானாவும் நவம்பர் 2018 ஆண்டு முதல் காதல் உறவில் உள்ளார்கள்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Miguel Bernardeau" (in ஸ்பானிஷ்). Kuranda. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Así ha sido la historia de amor de Aitana y Miguel Bernardeau". E! Online (in மெக்ஸிகன் ஸ்பானிஷ்). 12 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகுவல்_பெர்னார்டியோ&oldid=3396190" இலிருந்து மீள்விக்கப்பட்டது