மிகுத்தே சர்வாந்தீஸ் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமியோ மிகுத்தே சர்வாந்தீஸ் (Spanish: Premio de Literatura en Lengua Castellana Miguel de Cervantes) எனப்படுவது ஸ்பானிய மொழி இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிகவும் கௌரவமான வாழ்நாள் சாதனையாளர் விருதாகும். இது 1976இல் தோற்றுவிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் வழங்கப்படும் மான் புக்கர் பன்னாட்டு பரிசைப் போன்றே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்பானிய நாடுகளில் ஒன்றில் வாழ்ந்து வரும் பிரபல புனைவிலக்கிய எழுத்தாளருக்கு வழங்கப்படும் விருதாகும். டோன் கிகோத்தி என்ற நாவலை எழுதிய மிகுத்தே சர்வாந்தீஸ் என்ற எழுத்தாளரது நினைவாக இவ்விருது வழங்கப்படுகின்றது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.britannica.com/EBchecked/topic/103671/Cervantes-Prize