மா சாகுபடி தொழில் நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் மாம்பழ வகைகள் பெரும்பாலும் ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேகமாக வளரக்கூடிய இரகத்தை சேர்ந்த ஒரு வருட மாங்கன்றின் மேல் விருப்பப்படும் இரகத்தினை ஒட்டுவது பொதுவான முறையாகும். சிலநேரம், மண்ணுக்கேற்ப உகந்த இரகங்களின் மேல் சிறந்த குணமுடைய மா இரகங்கள் ஒட்டப் படுகின்றன. இந்திய சீன வகை இரகங்கள் சில விதையிலிருந்தும் வளர்க்கப்படுகின்றன. இவை ஒரு விதையில் பல முளை கருக்களைக் (embryo) கொண்டுள்ளன.

எப்படி பயிரிடுவது?[தொகு]

பெங்களுரா, செந்துரா, மல்கோவா, அல்பொன்சா, காலபாடு, பங்னப்பள்ளி, புட்டி, சீரி, ரூமானி, சேலம் பெங்களுரா பொன்ற இரகங்கள் உள்ளன. தோட்டம் அமைக்கும் போது கன்றுகள் 40 – 50 அடி இடைவெளியில் 90x90x90cm pit (ஏக்கருக்கு சுமார் 100 மரங்கள்) நடப்படுகின்றன. சாதாரணமாக, மாமரத்தோட்டங்களில் கழித்து விடுதல் தேவையற்றது. எனினும், முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. அதன் பிறகு மாமரங்கள் தாமாகவே விரும்பத்தகுந்த நிலைக்கு வளரும்

பருவம்[தொகு]

ஜுலை முதல் டிசம்பர் வரை.

மண்[தொகு]

நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் ஏற்றது. அமில-கார அளவு 6.5 முதல் 8.5 வரை இருக்கவேண்டும்.

நிலம் தயாரிதல்[தொகு]

  1. நிலத்தை 3-4 முறை நன்கு உழ வேண்டும்.
  2. வரிசைக்கு வரிசை 6 மீட்டரும் செடிக்கு செடி 10 மீட்டரும் இருக்கவெண்டும்.
  3. அடர் நடவு முறையில் வரிசைக்கு வரிசை 5 மீட்டரும் செடிக்கு செடி 10 மீட்டரும் இருக்க வேண்டும்.
  4. குழி 3 அடிக்கு 3 அடி இருக்க வேண்டும்.
  5. மண், மணல் மற்றும் தொழு உரம் 10 கி.கி மூன்றையும் 2 அடி வரை நிரப்பி ஆற விடவேண்டும்

கன்று[தொகு]

ஒட்டு கட்டிய செடிகளைதான் நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

  1. மேற்கோள்:TNAU,PAIYUR.