மால்பா நிலச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மால்பா நிலச்சரிவு (Malpa landslide) இந்தியாவில் நடைபெற்ற ஒரு மோசமான நிலச்சரிவு ஆகும். உத்ராஞ்சல் மாநிலத்தில், உயர் குமோன் இமாலயாவின் காளி பள்ளத்தாக்கில் உள்ள பித்தௌரகட் மாவட்டத்தில், 1998 ஆம் ஆண்டு ஆகத்து11 மற்றும் 17 ஆகிய நாட்களில் ஏற்பட்ட மிகப்பெரிய இந்நிலச்சரிவில் மால்பா கிராமம் முழுவதும் அழிந்துபோனது. இவ்விபத்தில் திபெத்திற்கு புனிதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் உட்பட மொத்தமாக 221 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய ஒடிசி நடனக் கலைஞர் புரோத்திமா பேடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பித்தௌரகட் பள்ளத்தாக்கு அகன்றக் காட்சி

சுமார் ஒரு மில்லியன் கன மீட்டர் அளவுள்ள பாறை மற்றும் குப்பைகூளம் வீழ்ச்சியால் இந்நிலச்சரிவு உருவானது. இந்த குப்பைகள் காளி நதியின் ஒருபாதியை அடைத்தன. பள்ளத்தாக்கிற்கு மேலே மிக உயர்ந்த பாறை, கிட்டத்தட்ட செங்குத்தான பாறைச் சரிவு ஏற்பட்டதால் இந்நிலச்சரிவு நிகழ்ந்தது. செங்குத்து சரிவுகளுடன், கூடுதலாக முக்கியப் புவித்தட்டுகளுக்கு அருகாமையில் பாறை அடுக்குகள் இருந்ததாலும், நுண்துளைப் பாறைகளின் மீது பொழிந்த அதிகமான மழைப்பொழிவும் பாறைகள் விழுவதற்கு காரணமாயின. பாறை அமைப்புகள் மீது ஏற்பட்ட அழுத்தமும் இந்நிலச்சரிவுக்கு மேலும் ஒரு காரணமாகும். இந்தியப் புவித்தட்டு வடக்கு நோக்கி நகர்ந்ததன் காரணமாக இமாலயப் பகுதியில் இருந்த பாறைகளுக்கு ஏற்பட்ட இடர்பாட்டை இந்நிலச்சரிவு தெளிவாக எடுத்துக்காட்டியது[1]

மேற்கோள்கள்[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்பா_நிலச்சரிவு&oldid=2097636" இலிருந்து மீள்விக்கப்பட்டது