உள்ளடக்கத்துக்குச் செல்

மால்கம் கிளாட்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்கம் கிளாட்வெல்

மால்கம் கிளாட்வெல் (Malcolm Timothy Gladwell 3 செப்டம்பர் 1963) கனடாவைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர், மற்றும் பேச்சாளர் ஆவார். [1] 1996 முதல் தி நியூ யார்க்கர் என்ற ஆங்கில செய்தித்தாளில் பணியாற்றும் எழுத்தாளராக இருந்து வருகிறார். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். அவை அனைத்தும் தி நியூ யார்க் டைம்ஸ் பட்டியல் படி அதிகமாக விற்பனையாகின்றன. 'ரிவிசனிஸ்ட் இஸ்டரி' என்ற பெயரில் தொடர் ஒலி உரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • அவுட்லையர்ஸ் [2]
  • பிலிங்க்
  • தி டிப்பிங் பாய்ன்ட்
  • டேவிட் அண்ட் கோலியாத்
  • வாட் தி டாக் சா

இவற்றில் டேவிட் அண்ட் கோலியாத் என்ற நூலையும் பிலிங்க் என்ற நூலையும் சித்தார்த்தன் சுந்தரம் என்பவர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

  • 2005 ஆம் ஆண்டில் 100 செல்வாக்கு மிகுந்த நபர்களில் மால்கம் கிளாட்வெல் ஒருவர் என டைம் இதழ் அறிவித்தது.
  • 2007 இல் அமெரிக்கன் சமூகவியல் கசகம் சமூக சிக்கல்களை ஆய்வு செய்து எழுதுவதில் சிறந்தவர் என முதல் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 2007 இல் வாட்டர்லூ பல்கலைக் கழகத்தின் மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது
  • 2011 இல் டோரோண்டோ பல்கலைக்கழக்த்தின் மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_கிளாட்வெல்&oldid=3224633" இலிருந்து மீள்விக்கப்பட்டது