உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க் லெத்தெரென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்கு லெத்தெரென்
பிறப்புமார்க்கு வின்சென்ட் லெத்தெரென்
6 பெப்ரவரி 1971 (1971-02-06) (அகவை 53)
செம்சுபோர்டு, எஸ்ஸெக்சு, இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1993–தற்போது வரை
துணைவர்ஜார்ஜிய டெய்லர்
வலைத்தளம்
http://www.mark.letheren.org/

மார்க்கு வின்சென்ட் லெத்தெரென் (Mark Vincent Letheren) (பிறப்பு 6 பெப்ரவரி 1971)[1] ஒரு ஆங்கில நடிகர் ஆவார். இவர் இதழியலாளர் சைமன் கிட்சனின் பாத்திரத்தை ஏற்று ஐ தொலைக்காட்சி அலைவரிசையில் "தி பில்" என்ற நாடகத்தில் நடித்தமைக்காகவும் பிபிசி ஒன் தொலைக்காட்சி அலைவரிசையில் பென் ஆர்டிங்காக கேசுவாலிட்டி என்ற நாடகத்தொடரில் நடித்தமைக்காகவும் வைர் இன் தி பிளட் என்ற நாடகத்தில் டிஎஸ் கெவின் ஜெப்ரீசு பாத்திரத்தில் நடித்தமைக்காகவும் நன்கு பிரபலமானவர் ஆவார்.

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

இவர் எஸ்ஸெக்சில் செல்ம்சுபோர்டில் பிறந்தார். இவர் ஆர்டிங்லி கல்லூரி மற்றும் கில்டுஹால் இசை மற்றும் நாடகப்பள்ளியில் பயின்றுள்ளார். [1]

தொழில் வாழ்க்கை

[தொகு]

வெள்ளித்திரையில் இவரது அறிமுகம் ரெஸ்டோரேசன் (1995 திரைப்படம்) படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் உடன் நடித்த பொழுது தொடங்கியது.

தொலைக்காட்சி

[தொகு]

இவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களான வைர் இன் தி பிளட், தி பில், சைலன்ட் விஷஷ், கேசுவாலிட்டி, ஹோல்பி சிட்டி, வாக்கிங் தி டெட், ஹார்ட்பீட், மற்றும் ஏ டச் ஆஃப் பாரஸ்ட் போன்றவற்றில் நடித்தவர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

லெத்தெரென் பிரிஸ்டலில் தனது நீண்ட கால இணையரான ஜார்ஜியா டெய்லரோடு (கேசுவாலிட்டி தொலைக்காட்சித் தொடரில் நடித்தவர்) வாழ்ந்து வந்தார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Dalglish, Darren (4 November 2010). "Questions & Answers with." londontheatre.co.uk. Archived from the original on 26 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 10 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Power, Vicki (6 July 2013). "A law unto themselves". The Express newspaper. http://www.express.co.uk/entertainment/tv-radio/412928/A-law-unto-themselves. பார்த்த நாள்: 10 December 2014. 
  3. "Georgia is Taylored to perfection". lep.co.uk (Lancashire Evening Post). 13 July 2013 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304071929/http://www.lep.co.uk/what-s-on/tv/georgia-is-taylored-to-perfection-1-5851418. பார்த்த நாள்: 10 December 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_லெத்தெரென்&oldid=3597400" இலிருந்து மீள்விக்கப்பட்டது