மார்கரெட் தர்ன்புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்கரெட் தர்ன்புல்
Margaret Turnbull
Maggie Turnbull.jpg
உலக அறிவியல் விழாவில் தர்ன்புல், ஜூன் 2008
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்அரிசோனா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபுறக்கோள் வாழ்தகவு

மார்கரெட் கரோல் தர்ன்புல் (Margaret Carol Turnbull) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 2004 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் வாழத்தகும் கோள்கள் அமைந்த விண்மீன் அமைப்புகளிலும் இரட்டைச் சூரிய அமைப்புகளிலும் வல்லுனர் ஆவார்,[1] இவர் கோள் வாழ்தகவு காண்பதிலும் வல்லுனர் ஆவார்.

இவர் 2002 இல் ஜில் டார்ட்டருடன் இணைந்து வாழ்தகவு கோள்கள் அட்டவணையை உருவாக்கினார்.[2] இது மாந்த வாழ்தகவு வாய்ப்புள்ள விண்மீன் அமைப்புகளின் அட்டவணை ஆகும்.[3] அடுத்த ஆண்டு 100 ஒளியாண்டுகளுக்குள் அமைந்த வாழ்தகவு விண்மீன் அட்டவணைப் பட்டியலில் இருந்த 5000 விண்மீன்களில் மிகவும் தகுதி வாய்ந்த 30 விண்மீன்களைத் தேர்வு செய்தார்.[3]

இவர் 2006 இல் ஒவ்வொன்றிலும் ஐந்து விண்மீன்கல் அமைந்த இரு வாழ்தகவு வாய்ப்புள்ள விண்மீன்களை குறும்பட்டியல்களை வெளியிட்டார்.[4] முதல் பட்டியலில் ஆலன் தொலைநோக்கி அணி உதவியால் சேதி கதிர்த்தேட்டங்களில் கண்டறிந்த விண்வமீன்கள் ஆகிய ([[பீட்டா கானும் வெனட்டிகோரம், எச். டி. 10307,எச். டி. 211415, 18 சுகார்ப்பி, 51 பெகாசி ஆகியன அடங்கும். இரண்டாம் பட்டியலில் தரை கோள்காணி கண்டறிந்த சிறந்த ஐந்து விண்மீன்கள் ஆகிய எப்சிலான் இண்டி, எப்சிலான் எரிதானி, [[40 எரிதானி, ஆல்பா சென்டாரி B, டௌ சேதி என்பன அடங்கும்.

தர்ன்புல்லை 2007 இல் CNN தொலைக்காட்சி "மதிநுட்பர்" என இவரது மிகவும் உயிர்தோன்றி அறிதிறன் நாகரிகம் நிலவ மிகவும் வாய்ப்புள்ள கோள்கள் உருவாக வல்ல விண்மீன்களின் அட்டவணையை உருவாக்கிய பணிக்காக பாராட்டியது.[5]

சிறுகோள் 7863 தர்ன்புல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. staffwriter (1 January 2004). "Gem Sorting for the Next Earth". Astrobiology Magazine. மூல முகவரியிலிருந்து 28 June 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 September 2012.
  2. "HabStars: Speeding Up In the Zone". Astrobiology Magazine (2003). மூல முகவரியிலிருந்து 4 October 2003 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 September 2012.
  3. 3.0 3.1 "Stars and Habitable Planets". மூல முகவரியிலிருந்து 28 June 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 September 2012.
  4. Lane, Earl (18 February 2006). "Astronomer Margaret Turnbull: A Short-List of Possible Life-Supporting Stars". American Association for the Advancement of Science. மூல முகவரியிலிருந்து 22 July 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 September 2012.
  5. Furman, Eric (13 July 2007). "Geniuses who will change your life". CNN. மூல முகவரியிலிருந்து 17 July 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 September 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_தர்ன்புல்&oldid=2720681" இருந்து மீள்விக்கப்பட்டது