மாரியம்மன் கோயில், அன்பில்
Appearance
மாரியம்மன் கோயில், அன்பில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருச்சி மாவட்டம் |
அமைவு: | கீழன்பில் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மாரியம்மன் |
அன்பில் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், அன்பிலில் அமைந்துள்ளது. [1]
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவர் முதலில் சுயம்புவாக அவதரித்து அதன்பின்னர் மூலவர் அம்மன் சுதை வடிவிலும், உத்சவர் உலோகத்தாலும் அமையப் பெற்றுள்ளார். [1]
விழாக்கள்
[தொகு]வைகாசியில் பஞ்சப்பிரகார உற்சவம், விடையாற்றி, ஆனியில் மகாசண்டி ஹோமம், பங்குனியில் பூச்சொரிதல், அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் கோயிலை வலம் வரல், குடியேறுதல் பின்னர் அடுத்த பத்து நாட்கள் திருவிழா, கண்ணாடி பல்லக்கு திருத்தேர் என்ற வகையில் விழாக்கள் நடைபெறுகின்றன.வருடபிறப்பு, ஆடிவெள்ளி, தைவெள்ளி, அம்மாவசை, பௌவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜை நடத்தப்பெறுகிறது.[2]