மாயாவி (சித்திரக்கதை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாயாவி 1939 ஆம் ஆண்டு லீ பாக் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைச் சித்திரக்கதையாகும். இது பெப்ரவரி 17, 1936 முதல் நாளாந்த செய்தித்தாளில் கருப்பு வெள்ளை சித்திரக் கீற்றாக வெளியாகி மே 1936 தொடக்கம் ஞாயிறு வண்ணக் கீற்றாகவும் வெளியாகிறது. மாயாவி சித்திரக் கதைகளையும் தாண்டி தொலைக்காட்சி திரைப்படங்கள் என்பவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாயாவியின் வரலாறு
[தொகு]மாயாவி "பெங்காலியா" எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர் ஆவார். அவ்வனத்தின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் பழங்குடிகளையும் பல தலைமுறைகளாகக் காத்து வரும் காவலர் அவர். இவர் எப்பொழுதும் ஊதா நிற முகமூடி அணிந்திருப்பதால் இவரை முகமூடி வீரர் என்றும் அழைப்பர். இவரது மனைவியின் பெயர் டயானா பால்மர் என்பதாகும்.
தமிழில் மாயாவி
[தொகு]தமிழில் இந்திரஜால் முத்து காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் இதழ்களில் வேதாளர், வேதாள மாயத்மா என்றும் ராணி காமிக்ஸ் இதழில் மாயாவி எனும் கதை பாத்திரம் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் அடைந்தது.