உள்ளடக்கத்துக்குச் செல்

மாயாசனகப்படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாயாசனகப்படலம் என்பது கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்திலுள்ள ஒரு படலம். பொய்யான சனகனைப் போல் உருவம் படைத்து சீதையின் முன் நிறுத்தி ராவணனுக்கு இணங்கி போகுமாறு பேசச் செய்கின்ற படலம் ஆகும். கம்பராமாயணத்தில் காணப்படும் இப்படலம் மூல நூலான வால்மீகி இராமாயணத்தில் இல்லை. [1]

இலங்கையின் அசோகவனத்தில் சீதையின் மனத்தை மாற்றுவதற்காக அரக்கர்கள் செய்யும் சூழ்ச்சிகள் பல. அதில் ஒன்று மாயாசனகப்படலம். சீதையின் தந்தையாகிய சனகனைப்போல் ஓர் உருவம் படைத்து சீதையின் முன் நிறுத்தி இராவணனுக்கு இணங்கிப் போகுமாறு கூறுகிறான். சீதையும் தன்னால் தன் தந்தைக்கு துன்பம் நேர்ந்ததே என கலங்குகிறாள். கலங்கினாலும் "இப்படியா உன் மனம் மாறிப் பேச வேண்டும்" என கடிந்து கூறுகிறாள். ஆக இந்த சூழ்ச்சிச் செயல் சீதையிடம் பலிக்கவில்லை என்று கூறுவது மாயாசனகப்படலம் ஆகும்.[2][3][4]

ஆதாரம்

[தொகு]
  1. “யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு: [1] :வாலி வதைப் படலம்; இன்னம்பூரான்; நவம்பர் 1, 2012 பதிவு]
  2. சாகித்திய அகாடமி பதிப்பித்த மு.வரதராசன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு
  3. சீதாதேவி இராவணனை இடித்தல்: மாயாசனகப்படலம் 18, 19, 21, 22, 24
  4. [https://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=123&pno=671 மாயா சனகனைச் சீதை கண்டு தகப்பனென்று புலம்பல்: மாயா சனகப்படலம், 31, 34, 38, 45
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாசனகப்படலம்&oldid=3731731" இலிருந்து மீள்விக்கப்பட்டது