உள்ளடக்கத்துக்குச் செல்

மானுவேலா காம்பனெல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானுவேலா காம்பனெல்லி
Manuela Campanelli
பணிCCRG இயக்குநர், கணிதவியல் பேராசிரியர், வானியற்பியல் முனைவர் திட்டம்
அறியப்படுவதுஎண்ணியல் சார்பியல் கோட்பாடு:

இருமக் கருந்துளைகளும் ஈர்ப்பு அலைகளும். ஈர்ப்புக் காந்த நீர்ம இயங்கியல்: கருந்துளை அகந்திரள்வு

செறிந்த இரும இணைவுகளும் ஈர்ப்பு அகடின் குலைவும்

மானுவேலா கம்பனெல்லி (Manuela Campanelli) (பிறப்பு: சுவிட்சர்லாந்து) உரெசெசுட்டர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணிதவியல் பள்ளியிலும் வானியற்பியல், தொழில்நுட்பவியல் திட்ட்த்திலும் பேராசிரியராக உள்ளார்.[1] மேலும், இவர் இங்குள்ள கணிப்புச் சார்பியலும் ஈர்ப்பியலும் மையத்தின் இயக்குநராகவும் உள்ளார்.[2] இவரது ஆய்வு கருந்துளைகளின் வானியற்பியலிலும் ஈர்ப்பு அலைகளிலும் குவிந்துள்ளது. இவர் 2009 இல் அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆனார்.[3]

வாழ்க்கை[தொகு]

இவர் சுவிட்சர்லாந்தில் பிறந்தார். பின்னர், தன் 14 ஆம் அகவையில் குடும்பத்தோடு இத்தாலிக்குப் புலம்பெயர்ந்தார். இவர் 1991 இல் இத்தாலி, பெரூகியா பல்கலைக்கழகத்தில் பயன்முறைக் கணிதவியலில் இலவல் பட்டம் பெற்றார். மேலும் 1996 இல் சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், இவர் உட்டா பல்கலைக்கழகத்துக்கும் செருமனியில் உள்ல மாக்சு பிளாங்க் நிறுவனத்துக்கும் மாறினார். இங்கு இவர் மீக்கணினி ஒப்புருவாக்கத்தைப் பயன்படுத்தி கருந்துளைகளின் இணைவை ஆய்வு செய்தார்.[4]

பிரவுன்வில்லி டெக்சாசு பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்ததும்,[4] காம்பனெல்லி உரோசெசுட்டர் தொழில்நுட்ப நிறுவனத்தில் 2007 இல் சேர்ந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manuela Campanelli". rit.edu. Rochester Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  2. "New Wave Astronomy". rit.edu. Rochester Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  3. 3.0 3.1 "Trustees Scholarship Award". rit.edu. Rochester Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  4. 4.0 4.1 "Manuela Campanelli". Physics Central. American Physical Society. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானுவேலா_காம்பனெல்லி&oldid=3960481" இலிருந்து மீள்விக்கப்பட்டது