மானசி கிரிஷ்சந்திர ஜோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானசி கிரிஷ்சந்திர ஜோசி
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு11 சூன் 1989 (1989-06-11) (அகவை 34)[1]
உயரம்171 செமீ
எடை66 கிகி[2]
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
Women Para-Badminton player
BWF Para-Badminton World Championships
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 Stoke Mandeville, England[3]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2017 Ulsan, South Korea[4]
Asian Championships
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 Asian Para-Badminton Championship[5]
International Championships
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 Thailand Para-Badminton International Women's singles[6]
Asian Para Games
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 Women's singles[7]

மானசி ஜோசி (Manasi Joshi) ஒரு இந்திய மாற்றுத்திறனாளி இறகுப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் எஸ்.எல்.3 நிலை மாற்றுத்திறனாளி வீரர்களில் உலகின் முன்னணி வீரராக உள்ளார். [8] இவரது தந்தை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார். ஆறு வயதிலிருந்து தனது தந்தையுடன் மென்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கே. ஜே. செளமியா பொறியியல் கல்லூரியில் 2010 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் ஆவார். 2011 ஆம் ஆண்டில் ஒரு சாலை விபத்தில் தனது இடது காலை இழந்தார்.[9] தனது உறுப்பிழப்பு இருந்த போதும், 2018 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் உள்ள பி. கோபிசந்த் மென்பந்தாட்டக் கழகத்தில் பயிற்சிக்காக இணைந்தார்.[10].2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இங்கிலாந்தில் இசுடோக் மாண்டெவில்லெயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.[11]. அக்டோபர் 2018 இல் இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2018) வெண்கலப்பதக்கத்தை வென்றார். 2019 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்தாட்ட உலக வாகையாளர் போட்டியில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்றார். [12]

பதக்கங்கள்[தொகு]

  • 2015 மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்துப் போட்டியில் உலக வாகையாளர் கோப்பையில் வெள்ளிப்பதக்கம்[13]
  • 2016 மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்துப் போட்டியில் ஆசிய வாகையாளர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் வெண்கலப் பதக்கம்
  • 2017 மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து உலக வாகையாளர் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம்[14]
  • 2018 இல் தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து சர்வதேச போட்டியில் வெண்கலப் பதக்கம்[9][15]
  • 2018 மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையல் பிரிவில் வெண்கலப் பதக்கம்
  • 2019 சுவிட்சர்லாந்து பேசல் நகரில் நடைபெற்ற உலக வாகையாளர் போட்டியில் தங்கப் பதக்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "BWF Para-Badminton Classification Master List" (PDF). BWF. Archived from the original (PDF) on 2018-08-11.
  2. "Manasi Joshi-Indian Para-athlete" (PDF). Maharashtra Badminton Association. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Indian Para badminton team wins 11 medals at World Championships - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-11.
  4. "India win 10 medals in Para-Badminton World Championships". www.sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-11.
  5. "Parul Parmar Makes India Proud, Wins Two Gold Medals At Para World Championships". www.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-11.
  6. "BWF - Thailand Para-Badminton International 2018 - Winners". bwf.tournamentsoftware.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-11.
  7. "BWF - Asian Para Games 2018 - Winners". https://bwf.tournamentsoftware.com/sport/winners.aspx?id=62CF57E0-E40B-42D8-B04B-4A4891183AA5. பார்க்கப்பட்ட நாள் 2018-08-11. {{cite web}}: External link in |website= (help)
  8. "Para-Badminton World Ranking Singles".[தொடர்பிழந்த இணைப்பு]
  9. 9.0 9.1 Subrahmanyam, V. v (2018-08-08). "Manasi in search of an Asiad medal" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/manasi-in-search-of-an-asiad-medal/article24634693.ece. 
  10. "Who Is Manasi Joshi: Gold Medalist At Para World Badminton Championship 2019". Sakshipost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.
  11. "Success Stories: Office of The State Commissioner for Persons with Disabilities, Government of Meghalaya". megscpwd.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-11.
  12. "I earned it: Manasi on winning gold at World Para-Badminton". Times of India. 28 August 2019. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2019.
  13. "Indian Para badminton team wins 11 medals at World Championships". Firstpost. 14 September 2015. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2019.
  14. "Parul Parmar Makes India Proud, Wins Two Gold Medals At Para World Championships". India Times. 27 November 2017. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2019.
  15. "Badminton: India's Manasi Joshi wins Bronze in women's singles at Thailand Para-Badminton International,2018 - Sports India Show" (in en-US). Sports India Show. 2018-08-09. https://www.sportsindiashow.com/badminton-indias-manasi-joshi-wins-bronze-womens-singles-thailand-para-badminton-international2018/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசி_கிரிஷ்சந்திர_ஜோசி&oldid=3567516" இலிருந்து மீள்விக்கப்பட்டது