மாந்தப் பரப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாந்தப் பரப்பியல் அல்லது மனிதப் பரப்பியல் என்பது புவிச் சூழலுக்கேற்ப மனிதன் எப்படி வாழ்கிறான், எவ்வாறு வளர்ந்து வருகிறான் என்பதை ஆராயும் துறை. பழங்குடிகளுக்கு காய், கனிகளைத் திரட்டுதல், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற செயல்கள் தலையாய தேவைகளைத் தீர்த்தன. அவர்களது இருப்பிடச் சூழல், வீட்டின் அமைப்பு முறை, வாழ்வியல் பழக்க வழக்கங்கள், உணவு முறை, உடையமைப்பு, கைத்தொழில், தகவல் பரிமாற்றம், வேட்டையாடும் முறை, அதற்கு பயன்படும் கருவிகள், இனப்பண்பாடு போன்றவற்றை விரிவாக ஆராய்வதும், மனிதப் பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதை விளக்குவதுமே "மாந்தப் பரப்பியலின்" நோக்கங்கள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மணிமேகலைகணேசன் (1974). தமிழ்நாட்டில் ஊர்சுற்றிகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 908-913.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தப்_பரப்பியல்&oldid=3600588" இலிருந்து மீள்விக்கப்பட்டது