மாத்தளை மேற்கு தமிழ் வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாத்தளை மேற்கு தமிழ் வித்தியாலயம் மாத்தளை நகரின் மேற்குப்பகுதியில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி இப்பாடசாலையானது ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டபொழுது 1 ஆசிரியரும் 14 மாணவர்களும் உடன் இருந்த பாடசாலையானது இன்று ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையிலான மாணவர்களிற்கு கல்வியை வழங்கி வருகின்றது. இப்பாடசாலைக்கு அஸ்கிரிய, மாதிவளை ஆகிய தோட்டப்பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

1980 இல் தோட்டப்புறப்பாடசாலைகளை அரசுடமையாக்கும் திட்டத்தின் கீழ் இப்பாடசாலையானது 1980 ஜூன் 15 ஆம் திகதி அரசுடமையாக்கப்பட்டது. 1995 இல் பெருந்தோட்டப்பாடசாலைகளை முன்னேற்றும் நோக்கில் நடத்தப்பட்ட சீடா உதவித்திட்டத்தின் கீழ் இப்பாடசாலையும் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கை ரூபா 2 மில்லியன் பெறுமதியான கட்டம் ஒன்றையும் அதிபர் விடுதியையும் பெற்றுக்கொண்டது. 2007 ஆம் ஆண்டில் இருந்து இப்பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களிற்கு பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. தினக்குரல் பரிசு, 27 ஜனவரி 2008 – சுதாகரன், காளிதாஸ்