மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி
பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை Pakkiyam National College, Matale | |
---|---|
அமைவிடம் | |
மாத்தளை இலங்கை | |
தகவல் | |
வகை | பொதுப் பாடசாலை |
குறிக்கோள் | Knowledge is power |
தொடக்கம் | 1927 |
நிறுவனர் | எஸ். எஸ். கந்தசாமி, பாக்கியம் கந்தசாமி |
அதிபர் | சுலோசனா பஞ்சேந்திரராஜன் |
தரங்கள் | 1-13 (தமிழ், ஆங்கிலம்) |
பால் | பெண்கள் |
வயது | 6 to 19 |
மாணவர்கள் | 1,500 |
இணையம் | www.pncj.sch.lk |
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி (Pakkiyam National College) என்பது இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியாகும். இது ஒரு பெண்கள் கல்லூரி. மகாத்மா காந்தி இலங்கை வருகை தந்தபோது, மாத்தளை வந்து 1927ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் இப்பாடசாலைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். அதன் நினைவுச்சின்னமாக காந்தி மண்டபம் என்னும் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.[1]
இக்கல்லூரியானது கந்தசாமி, பாக்கியம் கந்தசாமி ஆகியோரால் நிறுவப்பட்டதாகும்[2]. இது 1929 செப்டெம்பர் 9 அன்று சேர் பொன்னம்பலம் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதல் மாணவி விமலராணி கந்தசாமி ஆவார்.
1929இலிருந்து கல்லூரி முதல்வர்கள்
[தொகு]- லேய்லாண்டா (Leylanda), முதல்வராகப் பிரித்தானியாவிலிருந்து ஒரு பெண்.
- இலெச்சுமியம்மாள், கேரளாவிலிருந்து.
- கல்ட் கிரெட், பிரித்தானிய ஆங்கிலப் பெண்மணி.
- குளோரி நீல்சு, ஆங்கிலம் பயிற்றப்பட்ட இலங்கைத் தமிழர்.
1929 முதல் 1962 வரை இருந்த நான்கு அதிபர்கள்
[தொகு]- வெண்டபொனா (Wendapona) (1952-1955)
- டேவிட் (1955-1962)
- ய. கனகசபை (1962)
அரசுப் பள்ளியாக மாற்றப்பட்ட பின்னர்
[தொகு]- சின்னையா (1962-1973)
- சு. இராசரத்தினம்
- ந. நாகமணி (1973)
- அபேசேகர (1974 -1992)
- செகதாம்பாள் நாகேந்திரன் (1993-02-15இலிருந்து)
இன்றைய பாக்கியம் கல்லூரி
[தொகு]இன்றைய பாக்கியம் தேசிய கல்லூரியின் அதிபராக, சுலோசனா பஞ்சேந்திரராசன் கடமையாற்றுகிறார். தற்போது அங்கே ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர். எழுபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை கலவன் வகுப்புகளாகவும் ஆறு முதல் உயர்தரம் வரை மாணவிகளை மட்டும் கொண்டதாகவும் இப்பள்ளியானது அமைந்துள்ளது. இங்கு மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளுக்கான வகுப்புகளும் 2015ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்புகள்
[தொகு]மாத்தளையில் சிறந்த உயர்தரப் பெறுபேறுகளைப் பாக்கியம் தேசிய கல்லூரி பெற்றுள்ளது. இப்பாடசாலையில் உயர்தரத்தில் கலைப்பிரிவு, வர்த்தகப்பிரிவு, கணிதப்பிரிவு, விஞ்ஞானப்பிரிவு என்பன காணப்படுகின்றன. உயர்தரத்தில் மருத்துவபீடம், பொறியியற் பீடம், சட்டபீடம், கலைப்பீடம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் மாணவர்கள் இணைகின்றனர்.[சான்று தேவை]
கல்லூரிக் கீதம்
[தொகு]வளமிகு மாத்தளை மாநகர் நடுவே
- சுடர் விடும் நமது கல்லூரி
பாக்கிய வித்தியாலயமென்னும் பெயரால்
- பண்பை உயர்த்து நல்லேணி
தமிழொடு ஆங்கில சிங்கள மொழிகள்
- பயிற்றிடும் உத்தம பள்ளி
மும்மதம் போற்று நற் கோயில்-பல
- பண்புகள் பயிற்றிடுமாமே-உயர்
கலைகளை வளர்த்திடுமாமே
- மலைகளும் நதிகளும் மிகு நகர்க்கணியாய்த்
திகழ்ந்து நீ ஒளி விடுவாயே
வாழ்க! வாழ்க! வாழ்க!
பாக்கிய வித்தியாலயம் வாழ்க!
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மகாத்மா காந்தி அவர்கள் அடிக்கல் நாட்டல்". Archived from the original on 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2015.
- ↑ "Pakkiyam National College is The first Hindu English Medium School in the Central Province". 2008. Archived from the original on 2015-07-20. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2015.