மாதுளஞ்சாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிழிந்த மாதுளை சாறு
மாதுளையிலிருந்து பழச்சாறு தாயரித்தல், இசுதான்புல், துருக்கி

மாதுளை சாறு (Pomegranate juice) மாதுளம் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது சமையலில் சாறாகவும், செறிவேற்றப்பட்ட சாறாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சாதக பாதகங்கள்[தொகு]

மாதுளை சாறு குடிப்பதன் மூலம் பெறக்கூடிய சுகாதார நன்மைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.[1] ஆனால் இரத்த அழுத்த மேலாண்மை,[2] புற்றுநோய் சிகிச்சை,[3] குளுக்கோஸ் மற்றும் கணையநீர் மேலாண்மை,[4] இதய நோய் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கு எதிராகப் பயன்பாடு குறித்து உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.[5] மாதுளைச் சாற்றின் நன்மையானது இயற்கையாகப் பெறப்படும் கலோரியினைச் மட்படுத்தும்வரை உள்ளடக்கியதாகும்.

சந்தைப்படுத்தல்[தொகு]

பொதுமக்களிடம், மாதுளை சாறு அருந்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பயன்கள் குறித்து மாதுளை சாறு உற்பத்தியாளரான போம் வொண்டர்ஃபுல் நிறுவனத்தினர் கூறி, மாதுளை சாறு அருந்துவதை ஊக்குவித்தது வருகின்றனர். ஆனால் 2010 செப்டம்பர் 2010 நிலவரப்படி, கூட்டாட்சி வர்த்தக ஆணையத்தால் (FTC) இந்நிறுவனத்தினர் தவறான விளம்பர புகாருக்கு உட்பட்டனர்.[6] மே 2012இல், விசாரணை ஒன்றில் நிர்வாக சட்ட நீதிபதி FTCஇன் புகாரில் சில தவறான விளம்பர குற்றச்சாட்டுகளை நிறுத்திவைத்தனர்.[7] அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் போம் வொண்டர்ஃபுலின் நடவடிக்கை மே 23, 2012 முதல் நிலுவையில் உள்ளது.[8]

மாதுளை வெல்லப்பாகு[தொகு]

ஈரானில் இருந்து மாதுளை வெல்லப்பாகுகள்

மாதுளை வெல்லப்பாகு என்பது மாதுளை சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பழபாகு ஆகும். இது கரும்பிலிருந்து பெறப்பட்ட வெல்லப்பாகு அல்ல. இது, பழச்சாற்றில் நீர்குறைப்பு செய்து திடமாக்கி ஆவியாதல் மூலம் பெறப்படும் பாகுபோன்ற திரவமாகும். இது ஈரானிய உணவான ஃபெசென்ஜன், துருக்கிய உணவான டொல்மா மற்றும் பல்வேறு பழக்கலவையான கோபன் பழக்கலவையில் பயன்படுகிறது.[9] இது رب انار என்று (ராப் ஏனர்) பாரசீகத்திலும், دبس رمّان (டிபிஸ் ரும்மன்) என்று அரபிலும், நர் எகிசிசி என்று துருக்கிலும், நர்செரப் என்று அசர்பாய்ஜானியிலும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pomegranate: superfood or fad?". UK National Health Service (NHS). 2018-04-26.
  2. Gbinigie, OA; Onakpoya, IJ; Spencer, EA (Oct 2017). "Evidence for the effectiveness of pomegranate supplementation for blood pressure management is weak: A systematic review of randomized clinical trials.". Nutrition Research 46: 38–48. doi:10.1016/j.nutres.2017.07.007. பப்மெட்:29173650. https://ora.ox.ac.uk/objects/uuid:96cc7de0-19a9-43b7-b78d-9df37bc446a4. 
  3. Vlachojannis, Christian; Zimmerman, Benno F; Chrubasik-Hausmann, Sigmun (2015). "Efficacy and Safety of Pomegranate Medicinal Products for Cancer". Evidence-based Complementary and Alternative Medicine 2015: 258598. doi:10.1155/2015/258598. பப்மெட்:25815026. 
  4. Huang, Haohai; Liao, Dan; Chen, Guangzhao; Chen, Honglang; Zhu, Yongkung (2017). "Lack of efficacy of pomegranate supplementation for glucose management, insulin levels and sensitivity: evidence from a systematic review and meta-analysis". Nutrition Journal 16 (67): 67. doi:10.1186/s12937-017-0290-1. பப்மெட்:28985741. 
  5. "Pomegranate: superfood or fad?". UK National Health Service (NHS). 2018-04-26.
  6. Wyatt, Edward (September 27, 2010). "Regulators call health claims in Pom juice ads deceptive". The New York Times. https://www.nytimes.com/2010/09/28/business/28pom.html. பார்த்த நாள்: 6 February 2011. 
  7. "US FTC Office of Administrative Law Judges Docket No. 9344 In the Matter of Pom Wonderful LLC and Roll Global LLC, et al Initial Decision dated May 17, 2012" (PDF). U.S. Federal Trade Commission Office of Administrative Law Judges. 2010-09-27. பார்க்கப்பட்ட நாள் 2012-05-29.
  8. Kardell, Nicole (May 24, 2012). "Why POM Wonderful Can Celebrate FTC Judge's Ruling in Advertising Case". The National Law Review. http://www.natlawreview.com/article/why-pom-wonderful-can-celebrate-ftc-judge-s-ruling-advertising-case. பார்த்த நாள்: 28 May 2012. 
  9. "Making a foreign staple work back home". March 23, 2010. https://www.nytimes.com/2010/03/24/dining/24power.html?src=me&ref=homepage. 

மேலும் படிக்க[தொகு]

Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுளஞ்சாறு&oldid=3778256" இலிருந்து மீள்விக்கப்பட்டது