மாணவர் தலைவன் மற்றும் தலைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாணவர் தலைவன் மற்றும் தலைவி (Head girl and head boy) என்பது பள்ளியின் முழு மாணவர் அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களைக் குறிக்கிறது. இந்தச் சொற்கள் பொதுவாகப் பிரித்தானிய கல்வி முறையிலும், பொதுநலவாய நாடுகளின் பள்ளிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சில பள்ளிகள் பள்ளித் தலைவர் [1] அல்லது தலைமை மாணவர் போன்ற மாற்றுச் சொல்லாடல்களையும் பயன்படுத்துகின்றன. [2]

இவர்கள், பள்ளிகளில் நடக்கும் பொது நிகழ்வுகளில் பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பொறுப்பாவார்கள், பள்ளி சார்பாக உரையினை நிகழ்த்துவார்கள். [3] இவர்கள் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் பணியாற்றுகிறார்கள், மேலும் மாணவர்களின் கருத்துக்களைப் பள்ளியின் தலைமையுடன் பகிர்ந்து கொள்ளலாம். இவர்களுக்கு உதவுவதற்காக துணைத் தலைவர் மற்றும் தலைவி ஆகியோர் நியமிக்கப்படலாம்.

சான்றுகள்[தொகு]

  1. "Being human - School Captain of Visakha Vidyalaya, Colombo".
  2. "Is it time to get rid of head girls and boys?".
  3. "Head boy definition and meaning | Collins English Dictionary" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.