மாக்கினாக் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாக்கினாக் தீவில் மிதிவண்டிகள்

மாக்கினாக் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு தீவு. இதன் பரப்பளவு சுமார் 11 சதுர கிலோமீட்டர். இது மக்கினாக் நீரிணையின் கிழக்குக் கோடியில் அமைந்துள்ளது. பழங்குடிகள் வாழ்ந்து வந்த இந்தத் தீவில் 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியக் குடியேற்றம் நிகழ்ந்தது. அமெரிக்காவின் பெரும் ஏரிகளைச் சுற்றி நடந்த உரோம வர்த்தகத்தில் இந்தத் தீவு ஒரு முக்கிய இடம் வகித்தது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தத் தீவு ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகவும் ஒரு கோடை வாழிடமாகவும் மாறியது. இத்தீவின் பெரும்பாலான கட்டிடங்களும் அமைப்புகளும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவசரத் தேவைகளைத் தவிர (மருத்துவ உதவி வண்டி, தீ அணைப்பு வண்டி) மோட்டார் வாகனங்கள் இந்தத் தீவில் அனுமதிக்கப்படுவதல்லை என்பது இந்தத் தீவின் இன்னுமொரு முக்கிய சிறப்பாகும். மிதி வண்டியும் குதிரை வண்டியுமே இங்கு மிகப்பரவலாகக் காணப்படும் போக்குவரத்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்கினாக்_தீவு&oldid=3804513" இலிருந்து மீள்விக்கப்பட்டது