மல்லிநாத சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சமணர் கோயில், இன்னும் முப்பது சமணக் குடும்பங்கள் வாழ்கின்றன, சமணக்குடும்பங்களில் கர்ண பரம்பரை செய்தியாக அறியப்படுவது யாதெனில் ஐம்பெரும் காப்பியங்களில் முதலானதும் தமிழ் அறிஞர்களால் போற்றப்படுவதுமான சீவகசிந்தாமணியின் நாயகனும் யாழ் இசை வல்லானுமான சீவகன் பிறந்த ஊரான சோழநாட்டின் அங்கமான ஏமாங்கத நாட்டின் தலைநகரம் ராஜமாபுரம் இந்த மன்னார்குடி என்றும் இந்நகரின் சுடுகாட்டிலேயே அவன் பிறந்தான் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு நடைபெறும் பூஜைகளில் ராஜமாபுரம் என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது (ராஜாமபுர சமஸ்த ஸ்ராவக ஸ்ராவகி ஜினனாம் பூயா சுரஸ்தாந்தம்) வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவமும், ஆண்டுதோறும் மேலும் பல விழாக்களும் நடை பெறுகின்றன,சோழநாட்டில் தற்போது வழிபாட்டில் உள்ள ஐந்து(மன்னார்குடி,திருவாரூருக்கு அருகாமையில் உள்ள தீபங்குடி,தஞ்சாவூர்,கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள அனுமந்தகுடி,சமணக்கோயில்களில் முக்கியமானதாகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிநாத_சுவாமி_கோயில்&oldid=3856234" இலிருந்து மீள்விக்கப்பட்டது