மல்லர் கம்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மல்லர் கம்பம் விளையாட்டு வித்தை

மல்லர் கம்பம் என்பது உடல்வித்தை விளையாட்டு.

மல் என்னும் சொல் வளத்தைக் குறிக்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] உடல்வளம் கொண்ட சங்ககால மன்னர்களில் ஒருவன் ஆமூர் மல்லன். [2] தெருக்களில் வித்தை காட்டும் டொம்பர் தம் குழந்தைகளை நட்டுவைத்த மரத்தில் தலைகீழாக ஏறவும் இறங்கவும் செய்து விளையாட்டு காட்டுவர்.

தற்காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களும் பங்கு கொள்ளும் தேசிய உடல்வித்தைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வந்தாலும் 18-ம் நூற்றாண்டில் மகாராட்டிர மாநிலத்துப் பலம்பத்த தாதா தியோதர் என்பவரால் புத்துயிர் ஊட்டப்பட்ட விளையாட்டே சிறப்புற்று விளங்குகிறது. நடப்பட்ட கம்பத்தில் வித்தைகாட்டும் விளையாட்டில் ஆண்கள் பங்கு கொள்வர்.

கயிற்றில் தொங்கி வித்தை காட்டும் விளையாட்டுகளில் பெண்கள் பங்குகொள்கின்றனர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மல்லல் வளனே - உரியியல் 7
  2. புறநானூறு 80, 81, 62

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லர்_கம்பம்&oldid=1374661" இருந்து மீள்விக்கப்பட்டது