மலையாங்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாங்குளம் என்ற கிராமம் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1][2] நான்கு புறமும் குளங்களால் சூழப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இவ்வூரை கடமன் குளம் வடக்கு மற்றும் மேற்கிலும், பாறை குளம் கிழக்கு மற்றும் தெற்கிலும் சூழ்ந்துள்ளன. விவசாயம் இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாகும்.

ஊரைச்சுற்றி உள்ள கோவில்கள்[தொகு]

  1. சந்தனமாரியம்மன் கோவில்
  2. விநாயகர் கோவில்
  3. பார்வதி கோவில்
  4. வாழ வந்த அம்மன் கோவில்
  5. அய்யனார் கோவில்
  6. கூடாரக் கோவில்
  7. வெள்ளப் பட்டான் கோவில்
  8. காளியம்மன் கோவில்
  9. அணைந்தச்சி கோவில்
  10. எல்லையம்மன் கோவில்

நிறுவனங்கள்[தொகு]

இங்கு ஜெய் பாரத் பஞ்சாலை ,வி எல் ஜெ அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. வீரப்பா இந்து நடுநிலைப் பள்ளி மக்களுக்கான தொடக்க கல்வியை அளித்து வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாங்குளம்&oldid=3518023" இருந்து மீள்விக்கப்பட்டது