மலீகா லோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலீகா லோதி (Maleeha Lodhi) என்பவர் பாக்கித்தானின் பெண் தூதர் ஆவார். மேலும் இவர் இதழாளர், கல்வியாளர் மற்றும் அரசியலாளர் ஆவார். ஐக்கிய நாடுகள் அவையில் இவர் பாக்கித்தானின் பிரதிநிதியாக இருக்கிறார்.   இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆவார். புனித ஜேம்ஸ் கோர்ட்டின் தூதராகவும் இருந்தார். ஐக்கிய அமெரிக்காவின் தூதராகவும் இரண்டு முறை  இருந்தார்.[1][2][3][4]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

பிறப்பும் படிப்பும்[தொகு]

மலிகா லோதி இலாகூரில் பிறந்தார். இலாகூரிலும் இராவல்பிண்டியிலும் பள்ளிக் கல்வி பயின்றார். இலண்டன் பொருளியல் பள்ளியில் 1980 இல் ஆய்வுப் பட்டம் பெற்றார்.[5] இசுலாமாபாத் குவாயதே ஆசாம் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் இலண்டனுக்குச் சென்று இலண்டன் பொருளியல் பள்ளியில் அரசியல் குமுகவியல் பற்றிய கல்வி கற்பிக்கும் ஆசிரியராக 1985 வரை  பணி புரிந்தார்.

இதழாசிரியராக[தொகு]

தி முசுலீம் என்ற ஆங்கில செய்தித் தாளை 1987 முதல் 1990 வரை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். தி நியூஸ் இன்டர்நேசனல் என்ற பத்திரிகையை 1990-1993 ஆண்டுகளிலும் பின்னர் 1997-1999 ஆண்டுகளிலும் நடத்தி வந்தார். ஆசியாவிலேயே ஒரு ஆங்கில செய்தித் தாளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட முதல் பெண் இவரே ஆவார்.

தூதுவராக[தொகு]

ஐக்கிய அமெரிக்காவுக்குப் பாக்கித்தானின் தூதராக, அரசுத் தலைவர்  பெனாசிர் புட்டோவால் அமர்த்தப்பட்டார்.[6] இப்பதவியில் 1997 வரை இருந்தார். 1999 இல் மீண்டும் இதே பதவிக்கு அரசுத் தலைவர் முசாரப் இவரை  அமர்த்தினார்.. 2002 வரை இப்பதவியில்  இருந்தார்.  பின்னர் ஐக்கிய இராச்சியத்திற்குத் தூதராகச் சென்றார். ஐக்கிய நாட்டு பொதுச் செயலாளரின் ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினராக இடம் பெற்றார். 2015 பிப்ரவரியில் ஐக்கிய நாட்டு அவையில் பாக்கித்தானின் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டார்.

விருதுகள்[தொகு]

  • டைம் (இதழ்) உலகில் சிறந்த 100 மனிதர்களில் ஒருவர் எனப் பாராட்டியது.(1994)
  • பாக்கித்தான் அரசின் இலால் இமியாஸ் என்னும் விருது (2002)
  • இலண்டன் பொருளியல் பள்ளி வழங்கிய மதிப்புறு உறுப்பினர் விருது (2004)
  • இலண்டன் பெருநகர் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டம் (2005)

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலீகா_லோதி&oldid=3597346" இருந்து மீள்விக்கப்பட்டது