மலர் மன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது 'மலையிலிருந்து வந்தவன்' என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது.

மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலர்_மன்னன்&oldid=1317682" இலிருந்து மீள்விக்கப்பட்டது