மறைமலையடிகள் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறைமலையடிகள் நூலகம் என்பது மறைமலையடிகளின் வீட்டு நூலகத்தைக் கருவாகக் கொண்டு "சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் 1958 இல்" நிறுவப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.[1] இந்த நூலகம் தமிழியல் சார்ந்த பல்துறை நூல்களையும் இதழ்களையும் கொண்டுள்ளது. இந்து 1900 ஆண்டுக்கு முந்தைய நூற்றுக்கணக்கான பதிப்புகள், அரிய கடிதங்கள், ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்களோடு ஓர் ஆவணக் காப்பகமாக உள்ளது.[2]

பரவலாக சமூக ஆதரவு இன்றியும், போதிய அரச ஆதரவு இன்றியும் இந்த நூலகம் தற்போது கன்னிமாரா பொது நூலகக் கட்டத்தில் இயங்கி வருகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இடம் மாறும் மறைமலையடிகள் நூல்நிலையம்". Archived from the original on 2015-11-08. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.
  2. நூற்றாண்டு கடந்து பறக்கட்டும் கழகக் கொடி!, கட்டுரை, கரு. ஆறுமுகத் தமிழன், இந்து தமிழ் 2020. சூன். 27
  3. "இடம் மாறும் மறைமலையடிகள் நூல்நிலையம்". Archived from the original on 2015-11-08. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைமலையடிகள்_நூலகம்&oldid=3587847" இலிருந்து மீள்விக்கப்பட்டது