மருமகளுக்குக் காசுகள் கிடைத்தது எப்படி (இலங்கைக் கதை)
Appearance
மருமகளுக்குக் காசுகள் கிடைத்தது எப்படி (How the Daughter-in-Law Got the Coins) என்பது இலங்கையில் பரவலாக அறியப்படும் விசித்திரக் கதை ஆகும். எச். பார்க்கர் என்பவர் இலங்கையின் கிராமத்துக் கதைகளின் தொகுப்பில் இதை சேகரித்து வைத்திருந்தார். [1]
கதை
[தொகு]செல்வந்தப் பெண்ணைத் திருமணம் செய்கிறான் இளைஞன் ஒருவன். ஆனால் அந்தப் பெண் அவன் தாயைக் கவனிப்பதில்லை. அவன் தன் தாய்க்கு உடைந்த பானையின் துண்டுகள் நிரம்பிய பையைத் தருகிறான். நோயால் பாதிக்கப்பட்ட தாய், அந்த பானையை குலுக்கி, அவளைக் கவனித்துக் கொள்வாருக்கு அப்பையை வழங்குவதாகக் கூறுகிறாள். அந்த பை எழுப்பிய ஒலியைக் கேட்ட மருமகள் தங்கக் காசுகள் என்று எண்ணி, மாமியாரை கவனித்துக் கொள்கிறாள். மாமியார் இறந்தபின்னர், அந்த பையில் இருந்தது பானையின் சில்லுகள் என்பது அறிந்து அதிர்ச்சி அடைகிறாள்.