உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவ கலைச்சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவத்துறையில் பயன்படும் துறைசார் சொற்கள் மருத்துவ கலைச்சொற்கள் எனப்படும்.

இன்றைய மருத்துவத்துறை 19 20 நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற அலோபத்தி என்று அறியப்பட்ட பின்னர் அறிவியல் முறையில் மேம்பட்ட மேற்குநாட்டு மருத்துவத்திறையே பெரிதும் குறிக்கிறது. சித்த மருத்துவம், ஆயுள் வேதம், Homeopathy, சீன மருத்துவம் போன்றவைக்கு போதிய அறிவியல் அடிப்படை இல்லை. அதனால் அவை தரப்படுத்தப்பட்ட பொது மருத்துவமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆகையால் இன்றைய பெரும்பான்மை மருத்துவ கலைச்சொற்கள் மேற்குநாடுகளில் வளர்ச்சி பெற்ற மருத்துவத்துறையின் கலைச்சொற்களே.

இன்றைய மருத்துவ கலைச்சொற்கள் பெரிதும் ஆங்கில மொழியில் உள்ளன. இவை செவ்வியல் மொழிகளான கிரேக்கம், இலத்தீன ஆகிய சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. இவை வேர் சொற்களுடம் முன்னொட்டு, பின்னொட்டு சேர்த்து உருவாக்கப்படுகின்றன. உருசிய மொழி, ஜப்பானிய மொழி, ஸ்பானிஸ், சீனம், அரபு போன்ற அறிவியல் வளம்பெற்ற மொழிகளிலும் மருத்துவத்துறைப் பட்டப்படிப்பு உண்டு. அதனால் அந்த மொழிகளிலும் மருத்துவ கலைச்சொற்கள் உண்டு எனலாம். தமிழிலும் ஓரளவு விரிபு பெற்ற மருத்துவக் கலைச்சொற்கள் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_கலைச்சொற்கள்&oldid=2742497" இலிருந்து மீள்விக்கப்பட்டது