மருதி (சங்ககாலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருதி என்பவள் சங்ககாலத்துச் சிறந்த பெண்மணிகளில் ஒருத்தி.

கழார் முன்துறை சங்ககாலத்தில் ‘பரதவர் கோமான் பல்வேல் மத்தி’க்கு உரியதாயிருந்த காலம் ஒன்று. மத்தி ஒரு சிற்றரசன். அவனது பேரரசன் கரிகாலன்.

கழார்ப் பெருந்துறையில் ஆட்டனத்தியும், காவிரி என்பவளும் சேர்ந்து நீராடினர். ஆட்டனத்தியின் அழகினை விரும்பிய காவிரி தன் கூந்தலில் மறைத்து அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். அப்போது காவிரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. ஆட்டனத்தி கரையில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தான். இந்த மருதி அவனைக் காப்பாற்றி அவனோடு வாழ்ந்து வந்தாள்.

ஆதிமந்தி என்பவள் அரசன் கரிகாலன் மகள். அவள் ஆட்டனத்தியைக் காதலித்தாள். காதலன் ஆட்டனத்தியைக் காவிரியாறு கொண்டுசெல்லவில்லை என உறுதியாக நம்பினாள். ஊர் ஊராகத் தேடிக்கொண்டு ஆற்றோரமாகச் சென்றாள். உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான்மட்டும் கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பரணர் – அகம் 222, 226, 376,
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதி_(சங்ககாலம்)&oldid=2433651" இருந்து மீள்விக்கப்பட்டது