மரபு (மொழியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் தொல்காப்பியம் மரபியல் செய்திகள் என்னும் பகுதியில் மொழிமரபு பற்றிய செய்திகளை விளக்குகிறது. மரபு மாற்றமுடியாத ஒன்று என்று அது குறிப்பிடுகிறது. [1] மொழி முன்னோர் கூறிய மரபு வழியில் பேசப்படுகிறது. மரபுநிலை திரிந்தால் மொழி பலவாகச் சிதையும்.மொழி புரியாமல் போகும் என்பது அதன் விளக்கம். நம் உடல் கூறு நம் தாய் தந்தையர் உடல் கூறாக அமைவது போல் மொழியானது முன்னோர் பேசிய மரபில் (முறைமையில்) அமைகிறது.

மக்கள் விலங்கினம் பயிரினம் ஆகியவற்றில் தோன்றும் இளமைப் பெயர்கள் [2]விலங்கினங்களில் ஆணுக்கும் [3] பெண்ணுக்கும் [4] வழங்கப்படு வந்த பொதுப்பெயர்கள் முதலானவற்றைத் தொல்காப்பியம் மொழி மரபாகக் காட்டுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் (மரபியல் நூற்பா 1)
  2.  
    பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
    கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
    ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே. 1

  3. ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
    சேவும் சேவலும் இரலையும் கலையும்
    மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
    போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
    யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2

  4.  
    பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
    மூடும் நாகும் கடமையும் அளகும்
    மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
    அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே. 3

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபு_(மொழியியல்)&oldid=3451142" இலிருந்து மீள்விக்கப்பட்டது