மரச்சாறேற்றம்
மரச்சாறேற்றம் (ascent of sap) என்பது தாவரங்களின் கடத்தி இழையத்தின்வழி நீரையும் கனிமங்களையும் வேரிலிருந்து தாவர உச்சிக்கு மேல் நோக்கி நகர்த்துவவதாகும். கடத்திக்கலங்கள் என்பது உயிரற்ற கலங்ளைக் கொண்ட சிக்கலான மரவகை இழையமாகும். பல்வேறு தாவரக் குழுக்களிலும் காணப்படும் கடத்திக்கலத்தின் செயற்கலங்கள் உயிரற்றவை. இவை குழல் உறுப்புகளையும் சுமப்பிகளையும் தம்முள் கொண்டவை. இவ்விரு கல வகைகளும் தடித்த, மரப்பசையாக மாறிய இரண்டாம் நிலை கலச் சுவர்களைக் கொண்ட முதிர்நிலையில் இறந்துபட்டவையாக அமைபவை. இந்நிகழ்வினை விளக்க பல்வேறு இயங்குமுறைகள் முன்வைக்கப்பட்டாலும் இணைதல்-இழுத்தல் இயங்குமுறையே[1] சான்றுகள் உடையதாகவும் பலரது ஏற்பைப் பெற்றதாகவும் உள்ளது. இணைதல்-இழுத்தல் இயங்குமுறை , சில உயிருள்ள தாவரங்களில் வெளிப்படையாகக் காணப்படும் பேரளவிலான எதிர் அழுத்தம் காரணமாக, விமர்சிக்கப்பட்டாலும், செய்முறை,, உற்றுநோக்கியறிந்த தரவுகள் ஆகியன இம்முறைக்கு சான்றாகவே உள்ளன. .[2][3] மிக அண்மையில் முன்வைத்த துலங்கல் அழுத்தக் கொள்கை செகதீச சந்திர போசு அவர்களால் முன்வைக்கப்பட்ட இன்றியமையாத கொள்கையின் ஒரு பதிப்புருவை ஏற்கிறது. இருப்பினும் ஆய்வுசார் சான்றுகள் இதனை ஏற்கவில்லை.[4]
மரச்சாற்றின் கூறுகள்
[தொகு]தாவரத்தின் சாற்றில் இருவகைக் கூறுகள் உள்ளன.[5] இவை கடத்து நீர்மம், உணவு நீர்மம் என்பனவாகும், இவை இரண்டுமே உட்கூற்றில் வேறுபட்டவை. உணவு நீர்மத் தில்நீரும் சர்க்கரையும் காலக இயனியும் அமைந்துள்ளன.[6]
சாறேற்றக் கோட்பாடுகள்
[தொகு]தாவர நீர்மங்கள் துறையில் பேராசிரியரான பிரெஞ்சு நாட்டவர் என்றி காய்ன் அவர்களது மென் படலங்கள் குறித்த மாற்றுக் கொள்கையை முன்வத்தார்.[7] இந்தக் கோட்பாடு உயரமான மர உச்சிகளுக்கு எப்படி சத்து நீர்மம் கொண்டுசெல்லப்படுகிறது என்பதை விளக்க முயன்றது. இது இணைத்தல் இழுத்தல் கோட்பாட்டுக்கு மாற்ராக வைக்கப்பட்டது.[8] மிக உயரமான மரங்களின் உச்சிப் பகுதிகளில் கடத்து குழல்கள் மரச்சாறாலான மென்படலங்களால் மூடப்பட்டுள்ளன என இக்கொள்கை கருதுகிறது. குழல்களின் சுவர்களோடு மரச்சாறு நேரடியாகத் தொடர்பு கொள்கிறது. வாண்டர் வால்சு விசைகள் விளைவாக குழாயின் சுவரிலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவைப் பொறுத்து மென்படலத்தின் அடர்த்தி வேறுபடுகிறது. இந்த அடர்த்தி வேறுபாடு துலங்கலாக ஒரு "பிணைப்பகற்றும் அழுத்தத்தை" உருவாக்குகிறது. குழாயின் சுவரிலிருந்து அமைந்திருக்கும் தொலைவைப் பொறுத்து இதன்அளவும் மாறுபடுகிறது. (நீர்மத்தின் பெரும்பாலான பகுதியில் நிலவும் அழுத்தத்தினின்றும் வேறுபட்ட அழுத்தமே பிணைப்பகற்றும் அழுத்தம் ஆகும்; இந்த நீர்மம் தனது மேல் மட்டத்துடன் வினையாற்றுவதால் ஏற்படுகிறது. இந்த வினையாற்றுதல் ஒரு அழுத்தத்தை உருவாக்கும். அது நீர்மத்தின் பிற பகுதிகளில் காணும் அழுத்தத்தை விட அதிகரித்தோ குறைந்தோ காணப்படும்.) மரத்தின் இலைகள் நீராவிப்போக்கில் ஈடுபடும்போது கடத்தி குழல்களில் நீர் உறிஞ்சப்படுகிறது; இதனாலேயே குழாயினுள் மரச்சாற்றுப் படலத்தின் தடிமன் அதன் உயரத்துடன் மாறுபடுகிறது. பிணைப்பகற்றும் அழுத்தம் படலத்தின் தடிமன் சார்ந்து வேறுபடுவதனால் நீராவிப் போக்கின்போது இந்த அழுத்தத்தில் காணும் சரிவு வாட்டம் உயருகிறது. குழாயின் அடிப்பகுதியில் (இங்கு படலம் பெருமத் தடிமனுடன் இருக்கும்) அழுத்தம் அதிகமாகவும் அதன் மேற்பகுதியில் அழுத்தம் குறைவாகவும் இருக்கும் (இங்கு படலம் பேரளவு மெல்லியதாக இருக்கும்). படலத்துக்குள்ளேயே காணப்படும் இந்த இடம்சார் வேறுபாடு மரச்சாற்றை மேல்நோக்கித் தள்ளும் நிகர விசையை உண்டாக்குகிறது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Henry H. Dixon and J. Joly (1895) "On the Ascent of Sap", Philosophical Transactions of the Royal Society of London. B, 186 : 563–576.
- ↑ Xylem Structure and the Ascent of Sap, 2nd ed. 2002. by Melvin T. Tyree and Martin H. Zimmermann (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-43354-6) Springer-Verlag
- ↑ "The Cohesion-Tension Theory" by Angeles G, Bond B, Boyer JS, Brodribb T, Brooks JR, Burns MJ, Cavender-Bares J, Clearwater M, Cochard H, Comstock J, Davis SD, Domec J-C, Donovan L, Ewers F, Gartner B, Hacke U, Hinckley T, Holbrook NM, Jones HG, Kavanagh K, Law B, López-Portillo J, Lovisolo C, Martin T, Martínez-Vilalta J, Mayr S, Meinzer FC, Melcher P, Mencuccini M, Mulkey S, Nardini A, Neufeld HS, Passioura J, Pockman WT, Pratt RB, Rambal S, Richter H, Sack L, Salleo S, Schubert A, Schulte P, Sparks JP, Sperry J, Teskey R, Tyree M. New Phytologist, Vol. 163:3, pp. 451–452. (2004)
- ↑ Stiller, Volker and John S. Sperry (1999) "Canny's compensating pressure theory fails a test," American Journal of Botany, 86 : 1082–1086.
- ↑ "What is sap?". Texas A&M Agrilife Extension. April 29, 2022.
- ↑ Taiz, Lincoln; Zeiger, Eduardo; Moller, Ian Max; Murphy, Angus (2018). Fundamentals of Plant Physiology. United States of America: Oxford University Press. pp. 277–278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781605357904.
- ↑ See:
- Henri Gouin (October 2008) "A new approach for the limit to tree height using a liquid nanolayer model," Continuum Mechanics and Thermodynamics, 20 (5) : 317-329. Available on-line at: Arxiv.org
- Henri Gouin (2011) "Liquid-solid interaction at nanoscale and its application in vegetal biology," Colloids and Surfaces A, 383 : 17–22. Available on-line at: Arxiv.org
- Henri Gouin (2012) "The nanofluidics can explain ascent of water in tallest trees". Available on-line at: Arxiv.org
- Henri Gouin (2014) "The watering of trees. Embolization and recovery in xylem microtubes." Available on-line at: Arxiv.org
- ↑ See:
- Tyree M.T. (1997) "The cohesion-tension theory of sap ascent: current controversies," Journal of Experimental Botany, 48 : 1753-1765.
- Koch, W.; Sillett, S.C.; Jennings, G.M.; Davis, S.D. (2004) "The limit to tree height," Nature, 428 : 851-854.
- ↑ "Ascent of sap". பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.